Saturday, July 19, 2014

ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அபுபக்கர் அல்பக்தாதி

ஈராக்கிய அல்கைதாவான ISIS இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல்பக்தாதி, சில வருடங்களுக்கு முன்னர்தான், அமெரிக்காவினால் சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டிருந்தார். கடும்போக்கு இஸ்லாமியவாதிகளை, 'விடுதலைப் போராளிகள்' என்று அங்கீகரித்திருந்த அமெரிக்கா, ஜோர்டானில் இராணுவப் பயிற்சி வழங்கியது.

ஈராக்கில் பல பிரதேசங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ISIS எனும் கடும்போக்கு இஸ்லாமியவாத இயக்கம், சவூதியினால் உருவாக்கப்பட்ட வஹ்ஹாபிச மற்றும் சலபி சிந்தனையிலிருந்து தோன்றிய ஒரு தீவிரவாத இயக்கமாகும். ஈராக்கிய அல்கைதா என்று அழைக்கப் படும் ISIS இயக்கத்தின் தலைவர் யார்? அபு பக்கர் அல்பக்தாதி என்பது அவரது இயக்கப் பெயர். நிஜப் பெயர் : இப்ராஹீம் அவ்வத் அலி பத்ரி அல் சமாரி. இசிஸ் போராளிகள் மத்தியில் அவர் 'அல் பாக்தாதி' என்றே அழைக்கப் படுகிறார்.

இவர், தனது மோசமான தீவிரவாதச் செயல்கள் காரணமாக அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2005 முதல்,
Camp Bucca எனும் அமெரிக்க தடுப்பு முகாமில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த அல் பாக்தாதி, 2009 ம் ஆண்டு திடீரென விடுதலை செய்யப் பட்டார். இக்காலப் பகுதியில், மத்திய கிழக்கில் குழப்பங்களையும் அமைதியற்ற நிலையையும் உருவாக்கும் நோக்கில், அல்பக்தாதிக்கு இராணுவப் பயிற்சிகளையும் இளைஞர்களின் உணர்வுகளைத் தூண்டிவிடும் படியான விசேட பேச்சுப் பயிற்சிகளையும் இஸ்ரேலின் மொசாட்டும் அமெரிக்காவின் சிஐஏயும் இணைந்து வழங்கின. பிரித்தானியாவும் இதில் பங்கெடுத்திருந்தது. பயிற்சிகளின் முடிவில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

சிரியாவில் அவரை இறக்கி விட்ட அமெரிக்கா, அரச படைகளுக்கு எதிரான சண்டைக்கு ஆட்சேர்க்க அவரைப் பயன்படுத்திக் கொண்டது. சிரிய அரசாங்கத்திற்கெதிராக அமெரிக்காவின் அனுசரணையில் அல்கைதாவினால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைச் செயல்களில், அல்பக்தாதி குழுவினர், மிகத் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். இக்காலப் பகுதியில் சிரிய முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அவர்கள் செய்த அநீதிகளும் சித்திரவதைகளும் சொல்லி அடங்காதவை.

அப்போது சிரியாவில், இன்னொரு இஸ்லாமிய கடும்போக்கு இயக்கமான அல் நுஸ்ரா இயங்கிக் கொண்டிருந்தது. அல்பக்தாதி குழுவினர், அல் நுஸ்ராவுடன் கூட்டுச் சேர்ந்து, 'ஈராக், சிரியாவுக்கான இஸ்லாமிய அரசு'
(Islamic State of Iraq and Syria) என்ற பெயரில் ஒரு புதிய இயக்கத்தை உருவாக்கினார்கள். இரண்டு வருடங்களுக்குப் பின்னர், இரண்டு இயக்கங்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தி விட்டது அமெரிக்காவும் இஸ்ரேலும். அவர்கள் தங்களுக்குள் அடித்து ஆளையாள் கொன்று குவித்தனர். இஸ்லாமிய தனி அரசுக்காக ஐக்கிய முன்னணி அமைத்தவர்கள், எதிரிகளாக தமக்குள் மோதிக் கொண்டார்கள்.

ISIS, லெபனான் முதல் ஈராக் வரை, ஒரு இஸ்லாமிய அரசு அமைப்பதை நோக்கமாக கொண்டிருந்தது. அதனால் அது ஒரு சர்வதேச அமைப்பாக பரிணமித்தது. மேற்கு ஐரோப்பாவிலும், பிற அரபு நாடுகளிலும் இருந்து, ஜிகாத் மீது பற்றுக் கொண்ட புதிய உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

அல் நுஸ்ரா, ISIS ஆகிய இயக்கங்களுக்கு தேவையான நிதியுதவி, கட்டார், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து தாராளமாக கிடைத்து வந்தது. அவர்களுக்கு ஆயுத விநியோகம் செய்த நாடு எது? வேறு யார், அமெரிக்கா தான்! இசிஸ் (ISIS) போராளிகளுக்கு, ஜோர்டானில் வைத்து அமெரிக்க இராணுவத்தினால் பயிற்சியளிக்கப் பட்டது. சண்டையில் காயமடைந்த போராளிகளுக்கு, துருக்கியிலும், இஸ்ரேலிலும் மருத்துவ சிகிச்சை அளிக்கப் பட்டது. இதிலிருந்து இசிஸ் அமைப்பும் அதன் தலைவர் அல்பக்தாதியும் முற்று முழுக்க அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தயாரிப்பு என்பது தெளிவாகியது. உசாமா பின்லாடனைக் கொண்டு, இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாகக் காட்டி, மத்திய கிழக்கில் அநியாயங்களையும் சுரண்டல்களையும் கட்டவிழ்த்து விட்ட அமெரிக்க இப்போது, புதிய பெயரில் புதிய நபரைத் தெரிவு செய்து அனுப்பியுள்ளது.
அல் நுஸ்ரா, இசிஸ் ஆகிய இயக்கங்கள், சவூதி நிதியும், அமெரிக்க ஆயுதங்களும் பெற்று, பலமான இயக்கங்களாக வளர்ந்து, சிரியாவின் வடக்குப் பகுதியில் தமக்கென கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை வைத்திருந்தார்கள். சிரியாவிலும் ஈராக்கிலும் மிகவும் கொடூரமான கொலைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அல்பக்தாதியை முஸ்லிம்களின் கலீபாவாக ஏற்குமாறு மக்களை வற்புறுத்துகின்றார்கள். ஏற்க மறுப்பவர்களை எவ்வித ஈவிரக்கமுமின்றிச் சுட்டுக் கொல்கின்றார்கள். மொசுல் நகரில் இவ்வாறு பொதுமக்களையும் ஈராக்கியப் படை வீரர்களையும் கைகளைக் கட்டிக் குப்புறப் படுக்க வைத்துவிட்டு அவர்களது தலைகளில் சுட்டுத் தள்ளும் இசிஸ் தீவிரவாதிகளின் கொடூரமான வன்முறைகளைக் கண்டு உலகமே அதிர்ந்து போயுள்ளது. அப்படியும் வெறி அடங்காத இவர்கள், கொல்லப்பட்டவர்களின் கழுத்துகளை வெட்டி வேறாக்கிப் பார்த்துத் தங்களுக்குள் திருப்திப்பட்டுக் கொள்கின்றார்கள்.

இசிஸ் இயக்கம், திடீரென ஒரு சில நாட்களுக்குள் ஈராக்கின் பல நகரங்களை கைப்பற்றி தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தமை, பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 'இஸ்ரேலை யாராலும் வெல்ல முடியாது' என்பது போன்ற மாயை, இசிஸ் இயக்கத்தை சுற்றியும் பின்னப் பட்டது. உண்மையில், அமெரிக்காவின் உதவியின்றி, இசிஸ் மட்டுமல்ல இஸ்ரேல் கூட, ஒரு திடீர் யுத்தத்தில் வெற்றி மேல் வெற்றியை குவித்திருக்க முடியாது. தற்போது, ஈராக்கிய நலன்களை பாதுகாப்பதற்காக, 'இசிஸ் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்' அமெரிக்கா குதித்துள்ளது. அதுவும் ஒரு கண்துடைப்பு நாடகம் தான்.

ஏற்கனவே, இசிஸ் இயக்கத்தினர் எண்ணைக் கிணறுகளை கொண்ட மொசுல் நகரை கைப்பற்றிய நாளில் இருந்து, சர்வதேச சந்தையில் எண்ணையின் விலை உயர்ந்துள்ளது. இதனால், சவூதி அரேபியாவுக்கும், அமெரிக்காவுக்கும் மேலதிக வருமானம் கிடைக்கின்றது. அது அவர்களது பொருளாதாரத்திற்கு நல்லது. மேலும், ஈராக்கில் பிரச்சினை இருப்பதாகவும், அமெரிக்காவை தவிர வேறு யாரும் அதனை தீர்த்து வைக்க முடியாதென்றும் 'நிரூபிப்பதன்' மூலம், ஈராக்கை தொடர்ந்தும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முடியும். எண்ணெய் வளத்தையும் சுரண்ட முடியும்.

அத்துடன், இசிஸ் போராளிகள் படிப்படியாக முன்னேறி வருவதனால், தாம் நாட்டை இழக்க வேண்டி வந்து விடும் என்று அரபு மன்னர்கள் அஞ்சத் தொடங்கியுள்ளனர். அவர்கள் அமெரிக்காவை உதவிக்கு அழைப்பார்கள். அமெரிக்கா, அந்த முட்டாள் அரபு மன்னர்களுக்கு (காலாவதியாகிப் போன) தனது ஆயுதங்களை விற்றுப் பணம் பெறும். அவற்றைக் கொண்டு புதிய ஆயுதங்களைத் தயாரிக்கும். தேவைப்படும் போது, அல்பக்தாதியை சர்வதேச பயங்கரவாதியாகப் பிரகடனம் செய்து கொண்டு, யுத்தமொன்றைத் தொடங்கும். அதில் தனக்கு விருப்பமற்றவர்களை ஒழித்துக் கட்டும். இதில், இஸ்லாமிய கிலாபத் கனவில் ஆங்காங்கே இருந்து ஒன்று திரண்டுள்ள இசிஸ் தீவிரவாதிகள் கூண்டோடு சூறையாடப்படுவார்கள். இந்த எல்லா சதிகளுக்கும் பின்னால் நிற்பது அமெரிக்க, இஸ்ரேலிய, சவூதிய, பிரித்தானிய நலன்கள் மட்டுமே என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். எனவே, ஐஎஸ்ஐஎஸ் என்பதும், அபுபக்கர் அல்பக்தாதி என்பதும், அமெரிக்கா, இஸ்ரேல், பிரித்தானியா மற்றும் சவூதி அரேபியா ஆகிய மனித விரோத நாடுகளினால் கூட்டாகத் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு பொம்மையாகும்.

இச்சந்தர்ப்பத்தில் நாம் செய்ய வேண்டியது, இப்படியான முட்டாள் ஜிஹாதியர்களிடமிருந்தும், வஹ்ஹாபிசத் தீவிரவாதிகளிடமிருந்தும், அமெரிக்க-இஸ்ரேலிய சதிகளிலிருந்தும் உலக முஸ்லிம்களைப் பாதுகாக்குமாறு அல்லாஹ்வைப் பிரார்த்திக்க வேண்டும்.

குறிப்பு:

01.    ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவளிப்பதை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி வன்மையாகக் கண்டித்துள்ளார்.

02.    சர்வதேச மார்க்க அறிஞரும் முப்தியுமான பேராசிரியர் யூசுப் கர்ளாவி அவர்கள், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஒரு தீவிரவாத அமைப்பாகப் பிரகடனப்படுத்தியுள்ளதுடன், அதற்கு ஆதரவு வழங்குவது மார்க்க விரோதச் செயல் எனவும் வலியுறுத்தியுள்ளார். அபூபக்கர் அல்பக்தாதியின் இஸ்லாமிய கிலாபத் பிரடகனத்தையும் முற்றாக நிராகரித்துள்ளார். 

Wednesday, September 4, 2013

சிரியாவுக்கெதிரான அச்சுறுத்தல்கள், அந்நாட்டை இஸ்ரேலுக்கு அடிபணியச் செய்வதையே நோக்காகக் கொண்டவை


சிரியாவுக்கெதிரான மேற்கத்தேய மற்றும் அரபு முயற்சிகள் மற்றும் அந்நாட்டுக்கெதிரான இராணுவ அச்சுறுத்தல்கள் அனைத்தும் அந்நாட்டை இஸ்ரேலுக்கு அடிபணியச் செய்வதையே இலக்காகக் கொண்டவையாகும்.

இவ்வாறு, லெபனான் ஹிஸ்புல்லாஹ் போராட்ட முன்னணியின் ஆய்வாளர் செய்யித் முஹம்மத் அல்மூசவி, இக்னா செய்தி ஸ்தாபனத்திற்கு வழங்கிய செவ்வியின் போது குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இத்தகைய முயற்சிகளின் பின்னாலுள்ள குறிக்கோள், போராட்டக் குழுக்களின் வலிமையைப் பலவீனப்படுத்துவதும் பிராந்தியத்தில் சியோனிச அரசுக்கு சாதகமான நிலைகளை உருவாக்குவதுமாகும் என்றார்.

சிரியா மீது தாக்குதல் நடத்துவதெனில், ஜோர்டான், சைப்ரஸ் மற்றும் பாரசீக வளைகுடா நாடுகளையே அமெரிக்கா இதற்காகப் பயன்படுத்த முனையும். இதனால் சிரியாவையும் அமெரிக்க நலன்களைப் பேணும் நாடுகளில் ஒன்றாக மாற்றி விடுவதே அமெரிக்காவின் நோக்கமாகும்.

சிரியாவுக்கெதிரான யுத்தம் நீண்ட காலங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்ட ஒன்று எனக் குறிப்பிட்ட அல்மூசவி, அது ஈராக் மீதான ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து தற்போது அமுல்படுத்தப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

ஈராக் மீதான ஆக்கிரமிப்பு 20 நாட்களே இடம்பெற்றன. அப்போதைய அமெரிக்க இராஜாங்க செயலாளர் கோலின் பவல், ஈராக்கைத் தொடர்ந்து அடுத்த இலக்காக சிரியா இருக்கும் என பஷர் அல்அசாத்திடம் தெரிவித்திருந்தார். எனவே, சிரியா இதற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்த போதிலும் இவ் யுத்தம் அமெரிக்காவினால் பிற்போடப்பட்டு வந்தது.

லெபனான் மற்றும் காஸா மீதான சியோனிச அரசின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளே சிரியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு பிற்போடப்பட்டமைக்கான காரணம் எனக் குறிப்பிட்ட அவர், லெபனான் மற்றும் காஸா ஆக்கிரமிப்புகளின் போது போராட்ட இயக்கங்களை இஸ்ரேல் அழித்து விடும் என அமெரிக்கர்கள் எதிர்பார்த்திருந்த போதிலும் இஸ்ரேல் இவ் யுத்தங்களில் படுதோல்வி கண்டிருந்தது எனவும் குறிப்பிட்டார்.

அல்மூசவி மேலும் குறிப்பிடுகையில், மூன்று நாட்களில் அழித்து விடுவோம் என்ற நம்பிக்கையுடன் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு மீதான தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கர்கள் 33 நாட்களாகியும் தமது இலக்கை அடைய முடியாது தோல்வி கண்டனர் என்றார்.

ஹிஸ்புல்லாஹ்களுக்கும் ஈரானுக்கும் இடையே பாலமாக அமைந்திருப்பதனால், சிரியா மிக முக்கிய கேந்திர நிலையமாக விளங்குகின்றது. இவ்விரு பகுதியினருக்கும் இடையிலான தொடர்பு அறுக்கப்படுமானால் மேற்கத்தேய சக்திகள் முன்னெப்போதுமில்லாதவாறு பெரும் பலம் பெறும் என மேலும் அவர் குறிப்பிட்டார்.

சிரியாவுக்கெதிரான இவ் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் இஸ்ரேல் தொடர்ந்தும் தொடர்புபட்டு வருகின்றது எனக் குறிப்பிட்ட லெபனானிய ஆய்வாளர், லெபனான் மற்றும் காஸாவில் போராட்ட இயக்கங்கள் மீது தொடுத்த யுத்தங்களில் படுதோல்வி கண்ட இஸ்ரேல், அதற்குப் பழிவாங்குமுகமாக, இப்போராட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக இருந்து வரும் சிரியா மீதான தாக்குதல்களின் போது முன்னணியில் நின்று செயற்படுகின்றது எனவும் குறிப்பிட்டார்.

பிராந்தியத்தின் இஸ்லாமிய எழுச்சிப் போராட்டங்களுடன் இணைந்ததாக சிரிய வன்முறைகள் இடம்பெற்று வருகின்றமை பற்றிச் சுட்டிக்காட்டிய அவர், இஸ்லாமிய எழுச்சி பிராந்தியத்தை தூய்மைப்படுத்துவதாகக் காண்பித்துக் கொண்டு, எகிப்து, சவூதி அரேபியா மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகளைச் சேர்ந்த தீவிரப்போக்குடைய அறிஞர்கள் மற்றும் சமயப் பெரியார்களைக் கொண்டு சிரியாவில் வன்முறைகளையும் எதிரிகள் தூண்டி விட்டுக் கொண்டிருக்கின்றனர் என மேலும் குறிப்பிட்டார்.

சிரியாவுக்கான ஹிஸ்புல்லாஹ்களின் ஒத்துழைப்பு பற்றிக் குறிப்பிட்ட அவர், சிரியாவின் 40 உள்கிராமங்களில் லெபனான் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதனால், இம்மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது லெபனான் அரசாங்கத்தின் கடமையாகும் என்றார்.

அம்மக்களைப் பாதுகாத்து தமது பொறுப்புகளை சரியாகச் செய்வதில் லெபனான் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதனால், இக்கிராமங்களிலுள்ள இளைஞர்கள் ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் ஆதரவாளர்களாக மாறினர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் முதலாவது நடவடிக்கையாக அமைந்தவை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதும், இளைஞர்களுக்கு தம்மையும் தமது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கான பயிற்சிகளை வழங்குவதுமாகும் எனவும் அல்மூசவி குறிப்பிட்டார்.

சில காலங்களுக்குப் பின் குறித்த கிராமங்களில் வாழும் கிறிஸ்தவர்களும் தமக்கும் இத்தகைய பயிற்சிகளை வழங்குமாறு கோரி ஹிஸ்புல்லாஹ் அமைப்புக்கு விண்ணப்பித்தனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இனத்துவேஷமான ஃபத்வாக்களை வெளியிட்டு வரும் அல்நுஸ்ரா அமைப்பு ஷீஆ சமுதாயத்தை அவமதிக்கவும் அவர்களது புனித சின்னங்களை அழிக்கவும் என ஸ்தாபிக்கப்பட்டதாகும். இதனால், இவர்களிடமிருந்து தமது புனிதஸ்தலங்களைப் பாதுகாக்கவும் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு போராடி வருகின்றது என மேலும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பு வழங்கவே அமெரிக்கா இப்பிராந்தியத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளது எனக் குறிப்பிட்ட அவர், சிரியாவைத் தாக்கும் விடயத்தில் அமெரிக்கா தவறிழைக்குமானால், பின் சிரியாவின் தாக்குதல் இலக்காக இஸ்ரேல் நிர்ணயிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

சிரியாவிலுள்ள தக்பீரி குழுக்கள் பற்றிக் குறிப்பிட்ட அவர், இவர்கள், ஷீஆ சமுதாயத்தினரை கொல்வதன் மூலமாக தாம் சுவர்க்கம் செல்ல முடியும் என நம்பிக்கை கொண்டுள்ள மிகக் காட்டுமிராண்டித்தனமான தீவிரவாதக் குழுவாகும் என்றார்.

அல்நுஸ்ரா தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள், லிபியா, எகிப்து, மொரோக்கோ, சூடான், பிரான்ஸ், சாட், புர்கினா பஸோ, நோர்வே, அல்ஜீரியா, தூனிசியா, நெதர்லாந்து மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தாலிபான் போன்ற தீவிரப்போக்குடைய அரசாங்கமொன்றை சிரியாவில் அமைப்பதே அல்நுஸ்ரா அமைப்பின் நோக்கமாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Monday, July 22, 2013

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் வரலாறு முடிவுசிரேஷ்ட எகிப்திய அரசியல் அவதானி அஷ்ரப் பயூமி, இக்னா செய்தி வலையமைப்புக்கு வழங்கியுள்ள நேர்காணலில், பல மில்லியன் எகிப்திய மக்கள், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் கொள்கைகள் தொடர்பில் அதிருப்தியுற்றே வீதிகளில் இறங்கிப் போராடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வாஷிங்டன் டிசியில் வசிக்கும் பயூமி மேலும் தெரிவிக்கையில், எகிப்தின் நிலைமையும் அங்கு இடம்பெற்று வரும் நிகழ்வுகளும் கிளர்ச்சியாக அல்லது புரட்சியாக அல்லது அமெரிக்க ஊடகங்களுக்கான சவாலாக பெயரிடப்படக்கூடும் என்றார்.

இதற்கு என்ன பெயர் வைப்பது என்பது முக்கியமல்ல என நான் நினைக்கிறேன். முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஆட்சிக்கெதிராக 22 மில்லியன் எகிப்திய மக்களென்னும் மாபெரும் மக்கள் அணியினர் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர் என்பது மட்டும் உண்மையாகும். இம்மக்களின் கோரிக்கை, முர்சியின் அரசாங்கம் ஜனவரி 25, 2011 புரட்சியின் குறிக்கோள்களை அடையத் தவறியுள்ளமையினால் மீண்டுமொரு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதாகும்.
ஜூன் 30ம் திகதி எகிப்தில் இடம்பெற்றது வெறும் புரட்சி மட்டுமல்ல, மாறாக அது, இஸ்ரேலையும் அமெரிக்காவையும் அவற்றின் கொள்கையையும் நோக்கிச் சென்று கொண்டிருந்த முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் கொள்கைகளுக்கெதிரான மாபெரும் இந்திபாதாவாகும்.

நாட்டின் குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்கு ஒரு வருடம் என்பது பூர்த்தியான காலமல்ல என்ற போதிலும், அரசாங்கம் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான சரியான திசையில் சென்று கொண்டிருக்கின்றதா என்பதைக் கண்டறிவதற்கு ஒரு வருடம் என்பது மக்களுக்குப் போதுமானதாகும் எனவும் பயூமி குறிப்பிட்டுள்ளார்.

எனவே, புரட்சியாளர்களின் தேவையாக இருந்த அம்சங்களுக்கு எதிரான பாதையில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ஆட்சியை நகர்த்திச் செல்கின்றது என்ற முடிவுக்கு எகிப்திய மக்கள் வந்திருந்தனர்.

இதனாலேயே ஜனவரி 25 எழுச்சியை விடவும் பாரியளவில் ஜூன் 30 எழுச்சியில் எகிப்திய மக்கள் பங்குகொண்டனர்.

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு இப்பிராந்தியத்தில் அமெரிக்க கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கியமையே முர்சியின் அரசாங்கத்தை மக்கள் வீழ்த்துவதற்குப் பிரதான காரணமாயிற்று.

கேம்ப் டேவிட் ஒப்பந்தங்களை உறுதிப்படுத்தியமையும், ஷிமன் பெரசுக்கு முர்சி எழுதிய கடிதமும் முர்சியின் அரசாங்கம் அமெரிக்க சார்பு அரசாங்கம் என்பதைப் பிரகடனம் செய்வதாக அமைந்தன எனவும் பயூமி குறிப்பிட்டார்.

பலஸ்தீன விவகாரத்தில் முர்சியின் ஒத்துழைப்பின்மை, முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் சர்வாதிகாரப்போக்கு, அரசாங்க நிறுவனங்களில் மக்களின் வெறுப்புக்குரியவர்கள் தலைவர்களாக நியமிக்கப்பட்டமை, சிரியா விவகாரத்தில் முர்சியின் நியாயமற்ற போக்கு, அசாதுக்கு எதிரான குழுவுடன் முர்சி இணைந்து கொண்டமை போன்றனவும் முர்சியின் அரசாங்கத்தின் மீது மக்கள் சீற்றம் கொள்ளக் காரணமாக அமைந்தன.

மற்றொரு காரணம், கடந்த மாதத்தில் எகிப்தில் இடம்பெற்ற ஷீஆ முஸ்லிம்கள் மீதான படுகொலை நடவடிக்கைகளாகும். சலபிகளினால் முடுக்கி விடப்பட்ட இப்படுகொலை நடவடிக்கைகள் தொடர்பான கூட்டங்களில் முர்சியும் கலந்து கொண்டிருந்தார்.

எகிப்திய மக்கள், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை நிராகரித்து விட்டு ஆட்சி அமைக்க முடியுமா எனக் கேட்கப்பட்ட போது பதிலளித்த பயூமி, முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஆதரவாளர்களும் சலபிகளும் இணைந்து எகிப்து மக்களின் மொத்த சனத்தொகையில் 25 வீதமே உள்ளனர் என்பதனால் அவர்களால் பாரிய ஆபத்துகளை அம்மக்களுக்கு ஏற்படுத்த முடியாது என்றார்.

Friday, October 5, 2012

"இஸ்ரேல் ஒரு பித்துப் பிடித்த கிரிமினல் தேசம்!" - யூத பேராசிரியர்


"The Holocaust Industry" என்ற நூலை எழுதிப் பிரபலமான, அமெரிக்க யூத அரசியல் அறிஞர் Norman Finkelstein உடனான கலந்துரையாடல். (டச்சு மொழியில்நெதர்லாந்து பத்திரிகையான  Trouw வில் பிரசுரமானது.)

உலகம் முழுவதும் சூடாக விற்பனையான அந்த நூல் (The Holocaust Industry), இஸ்ரேல் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கின்றது. இஸ்ரேல், யூத இனப்படுகொலையை முடிந்தளவு தனது நலன்களுக்காக பயன்படுத்தி வருகின்றது. நிரந்தரமான பலிக்கடாக்கள் என்ற பிம்பத்தை காட்டி, தனக்கெதிரான விமர்சனங்களை அடக்கி வருகின்றது.  இந்த நூலை எழுதிய Finkelstein னின் தாயும், தந்தையும் நாசிகளால் விஷவாயு அடித்து கொலை செய்யப் பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. சர்ச்சைக்குரிய நூலை எழுதியதன் மூலம், பலரின் பாராட்டுகளையும், எதிர்ப்புகளையும் சம்பாதித்தவர். அவர் விரிவுரையாளராக பணியாற்றிய சிக்காகோ பல்கலைக்கழகம் அவரை பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பியது. Finkelstein தற்பொழுது பல நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு சென்று விரிவுரையாற்றி வருகின்றார்.  கடந்த வாரம், ஆம்ஸ்டர்டாம் Vrije Universiteit க்கு வந்திருந்த பொழுது இந்த சந்திப்பு இடம்பெற்றது. 
கேள்வி: நீங்கள், இஸ்ரேல் ஒரு பித்துப் பிடித்த கிரிமினல் தேசம் என்று அழைக்கின்றீர்கள். ஏன்?

பதில்: அப்படிக் கூறுவது எனக்குப் பிடித்திருப்பதால் என்றல்ல, ஆனால் அது தான் உண்மை. அண்மைய வரலாற்றை எடுத்துப் பாருங்கள். இரண்டு, அல்லது மூன்று வருடங்களில், இஸ்ரேல் ஒரு அயல்நாட்டுடன் யுத்தத்தை தொடங்குகின்றது. இரண்டு, அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு தடவை யார் முதலில் தாக்குவார்கள் என்று ஊடகங்கள் ஆராய்கின்றன. அவர்களுக்கு இது ஒரு வீடியோ கேம் விளையாட்டு போல நடந்து கொள்கின்றனர். இந்த அளவுக்கு பைத்தியக்காரத்தனமாக யுத்ததிற்குள்ளேயே மூழ்கிக் கிடப்பது ஆரோக்கியமானதல்ல.

2008  டிசம்பர், 2009 ஜனவரி, இரண்டு மாதங்களும் இஸ்ரேல் காசா பகுதியை தாக்கியது. 1400 பேரைக் கொன்றார்கள், அதிலே 1200 பேர் பொது மக்கள், 350 பிள்ளைகள். இஸ்ரேல் பக்கம், 13 இழப்புகள், அதிலே 3 பேர் மட்டுமே பொது மக்கள். சர்வதேச மட்டத்தில் இஸ்ரேல் கடுமையாக கண்டிக்கப் பட்டது. ஆனால், சிறிது காலத்தின் பின்னர் மீண்டும் காசாவை தாக்குவது பற்றி பேசத் தொடங்கினார்கள்.
ஓரிரு வருடங்களுக்கு முன்னர், ஜூலை, ஆகஸ்ட் 2006 ல், லெபனான் மீது படையெடுத்தார்கள். 1200 பேரைக் கொன்றார்கள், அதிலே 1000 பேர் பொது மக்கள். பாலங்கள், கட்டுமான அமைப்புகளை அழித்தார்கள். இஸ்ரேலிய ஊடகங்களை வாசித்தீர்கள் என்றால், மீண்டும் லெபனானை தாக்குவது பற்றி யோசிக்கிறார்கள் என்பது புரியும்.
தற்பொழுது இடைவிடாமல் ஈரான் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விவாதம் இரண்டு கேள்விகளாக பிரிந்துள்ளது: இஸ்ரேல் தாக்குமா? அப்படி நடந்தால், இந்த யுத்தத்தை வெல்ல முடியுமா? முக்கியமான கேள்வி அங்கே எழுப்பப் படுவதில்லை. தாக்குவதற்கு இஸ்ரேலுக்கு உரிமை இருக்கின்றதா? சர்வதேச சட்டம் அது பற்றி விளக்கமாக கூறுகின்றது. ஐக்கிய நாடுகள் சாசனத்தின் இரண்டாவது ஷரத்து, இன்னொரு நாட்டின் மீது தாக்குவதை தடை செய்கின்றது. ஒரே ஒரு விதிவிலக்கு மட்டுமே உண்டு. 51 வது ஷரத்தின் படி, மற்ற நாட்டு எம்மை ஆயுதங்களுடன் தாக்கினால், பாதுகாப்புக்காக திருப்பித் தாக்கலாம். ஆனால் ஈரான் தாக்காது. முல்லாக்கள்  அந்தளவு பைத்தியக்காரர்கள் அல்லர்.  அதனால், இஸ்ரேல் ஒரு முன்கூட்டியே தடுக்கும் யுத்தம் ஒன்றை பற்றிப் பேசுகின்றது. அது நூற்றுக்குநூறு வீதம் சட்டவிரோதம்.

இஸ்ரேல் தான்தோன்றித்தனமாக நடக்கின்றது. சர்வதேச சமூகம் தனது கடமையை செய்யாத படியால் தான் இஸ்ரேல் அந்தளவு தூரம் வந்தது. .நா. சாசனத்தை மதிக்க வேண்டுமென, ஐக்கிய நாடுகள் கட்டாயப் படுத்த வேண்டும். அவர்கள் கூற வேண்டும்: "சட்டத்தை மீறினால் பொருளாதாரத் தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும்." ஆனால், அதனை யாரும் சொல்வதில்லை. நெதர்லாந்தும் ஒன்றும் சொல்வதில்லை. .நா. விவாதங்களிலும், சர்வதேச நீதிமன்றத்திலும், நெதர்லாந்து இஸ்ரேல் சார்பாக நடந்து கொள்கின்றது. இது மிலேச்சத் தனம். இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வதுடன், தண்டனையில் இருந்தும் தப்பிக் கொள்கிறது.

கேள்வி: ஆனால், இஸ்ரேலை சுற்றி வர எதிரி நாடுகள் உள்ளன. ஈரானிய அதிபர் அஹ்மதினஜாத் இஸ்ரேல் ஒரு புற்றுநோய், அதனால் அழிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கூறியிருக்கிறார். ஒரு நாடு தனது சொந்த பாதுகாப்புக்காக அப்படி நடந்து கொள்ளக் கூடாதா?

பதில்: அயலில் உள்ள அரபு நாடுகள் எல்லாம், நிரந்தரமான எதிரி நாடுகள் என்பது போல இஸ்ரேல் நடந்து கொள்கிறது. ஆனால், கடந்த பத்தாண்டுகளாக, இந்த அரபு நாடுகள் முரண்பாட்டை தீர்த்துக் கொள்வதற்கு முன்வந்தன. 1981 ம் ஆண்டு, சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் பஹத் ஒரு சமாதான திட்டத்தை முன்மொழிந்தார். அந்த திட்டத்தின் பிரகாரம், அனைத்து அரபு நாடுகளும் இஸ்ரேலை அங்கீகரிக்கும். அதற்குப் பதிலாக, இஸ்ரேல் பாலஸ்தீன பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொண்டு, 1967 ம் ஆண்டிருந்த எல்லைக்கு திரும்பிச் செல்ல வேண்டும்.  2002 ம் ஆண்டு, அரபு லீக் இன்னொரு சமாதான திட்டத்தைக் கொண்டு வந்தது. 1967 எல்லைக் கோட்டின் படி, இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரண்டு நாடுகளை அங்கீகரிப்பது. பாலஸ்தீன அகதிகளுக்கும் ஒரு நல்ல முடிவு. இஸ்ரேலுடனான உறவுகளை சுமுகமாக்கவும் அரபு லீக் முன்வந்தது. அரபு லீக்கில் அங்கம் வகிக்கும் அனைத்து 22 நாடுகளும் அந்த திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்தன. இஸ்லாமிய கூட்டமைப்பான OIC யில் உள்ள 57 நாடுகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. ஈரானும் அதில் ஒன்று.

கேள்வி: காசா பகுதியில் இருந்து நடத்தப்படும் ஏவுகணைத் தாக்குதல்கள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்: இஸ்ரேல் அதனை ஒரு "தாக்குதல்" என்று அழைத்துக் கொள்கின்றது.  உண்மையில், அவை 98 சத வீதம், இஸ்ரேலின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு எதிரான பதிலடிகள்.  அது ஆதாரங்களுடன் நிரூபிக்கப் பட்டுள்ளது. 2008 ம் ஆண்டு, இஸ்ரேல், ஹமாஸ் க்கு இடையிலான யுத்த நிறுத்த மீறலாகவே, இஸ்ரேலின் தாக்குதல் இடம்பெற்றது. இஸ்ரேல் தான் முதலில் போர் நிறுத்தத்தை மீறியது. சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையை வாசியுங்கள். ஏன்? ஏனென்றால், இஸ்ரேல்தான் ஒரு பயங்கரமான இராணுவ சக்தி என்பதை காட்ட விரும்பியது. 
2006 ம் ஆண்டு, லெபனானுடன் நடந்த யுத்தத்தில், இஸ்ரேல் அவமானகரமான பின்னடைவை சந்தித்திருந்தது. தான் இழந்த மேலாண்மையை மீளப் பெற விரும்பியது. இதற்கிடையில், இரண்டு தேசக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாக, இஸ்ரேலையும் அங்கீகரிக்கத் தயாராக இருப்பதாக, ஹமாஸ் அறிவித்திருந்தது. லெபனானில் ஹிஸ்புல்லா அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும், இஸ்ரேலும், ஹமாசும் அத்தகைய உடன்படிக்கைக்கு உரித்துடையவர்கள். நாம் அதில் தலையிட  மாட்டோம் என்றும் ஹிஸ்புல்லா தெரிவித்திருந்தது.  
கேள்வி: இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினைக்கு அரபு வசந்தம் ஒரு தீர்வைக் கொண்டு வருமா?

பதில்: ஒப்பீட்டளவில் அரபு வசந்தம் ஒரு நேர்மறையான தாக்கத்தை செலுத்தியுள்ளது. இஸ்ரேலின் இராணுவ பலத்தைப் பொறுத்த வரையில், அதன் எல்லைகள் மட்டுப் படுத்தப் பட்டுள்ளன. அன்றைய எகிப்திய அதிபர் முபாரக் எல்லையை மூடி விட்டதால் தான், 2008 காஸா  படுகொலை சாத்தியமானது. பாலஸ்தீனியர்கள், வளைகளுக்குள் அகப்பட்ட எலிகள் போலாகி விட்டனர். இஸ்ரேல் அவர்களை கொல்ல முடிந்தது. இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியை சேர்ந்த புதிய எகிப்திய ஜனாதிபதி மொர்சி, அது போன்ற செயலில் இறங்க மாட்டார்.  அது ஒரு இலாபம். ஆனால், பிரச்சினை தொடர்ந்தும் இருக்கும். ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச சட்டத்தை நடைமுறைப் படுத்தும் பொழுது, அதற்கு ஒரு முடிவு வரும். சட்டத்தின் படி, மேற்கு ஜோர்டான் நதிக்கரை, கிழக்கு ஜெருசலேம், காசா போன்ற பகுதிகளுக்கு பாலஸ்தீனியர்கள் உரித்துடையவர்கள்.

அமெரிக்கா இஸ்ரேலை விழ விடாது பிடித்து வைத்திருக்கிறது. ஆக்கிரமிக்கப் பட்ட பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகளை விலக்கிக்  கொள்ள வேண்டுமென்று ஒபாமா விரும்பலாம். ஆனால், அவர் அமெரிக்காவின் யூத ஆதரவாளர்களில் தங்கியிருக்கிறார். ஒபாமா இஸ்ரேலின் கையை விட்டாரானால், பணக்கார யூத வாக்காளர்களின் ஆதரவை மட்டுமல்ல, தேர்தல் செலவுக்கான நிதியையும் இழக்க வேண்டியிருக்கும். இப்படித் தான் நடந்து கொண்டிருக்கிறது.

கேள்வி: சமாதான பேச்சுவார்த்தைக்கு சமாதி கட்டப் பட்டு விட்டதா?
பதில்: எங்களை நாங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். அங்கே ஒருக்காலும் சமாதான நடவடிக்கை இருக்கவில்லை. அங்கே, நில அபகரிப்பு நடவடிக்கை தான் நடந்து கொண்டிருந்தது. அதனை மூடி மறைப்பதற்கு, இஸ்ரேல் சமாதான பேச்சுவார்த்தை என்ற நாடகமாடியது.   அதை ஒருக்கால் திருப்பிப் பாருங்கள். சமாதான பேச்சுவார்த்தையின் இறுதிக் காலகட்டமான செப்டம்பர் 1993 ஒஸ்லோ ஒப்பந்தம் ஏற்பட்ட பொழுது, மேற்கு ஜோர்டான் நதிக்கரையில் 250.000  யூத குடியேற்றக் காரர்கள் மாத்திரமே இருந்தனர்.  இன்று, 20 வருடங்களுக்குப் பிறகு, அங்கே 525.000 குடியேற்றக்காரர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு தடவையும், இது பற்றி இஸ்ரேலிடம் கேட்டால், "அதெல்லாம் சமாதான பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப் பட வேண்டும்"  என்று கூறுகின்றனர். உண்மையில் இஸ்ரேல் என்றுமே சமாதானத்தை விரும்பியதில்லை. அவர்கள் மேலும் பல நிலங்களை அபகரிக்க விரும்புகின்றனர். யூத குடியேற்றங்கள் மூலம், 10 வீதமான மேற்குக்கரை பகுதிகளை இஸ்ரேலுடன் இணைத்து விட்டார்கள். அதைச் செய்வதற்கு அவர்களுக்கு எந்த செலவும் இருக்கவில்லை. பாலஸ்தீனர்களின் எதிர்ப்பை  அடக்குவதற்காக, அவர்களை சித்திரவதை செய்யும் போலிஸ் வேலையை செய்வதற்காக, கொஞ்சம் காசு கொடுத்து பாலஸ்தீன அதிகார சபையை நியமித்துள்ளது. ஆக்கிரமிக்கப் பட்ட பகுதிகளுக்கான நிதியுதவி, உதவித் திட்டம் என்ற பெயரில் ஐரோப்பாவில் இருந்து வருகின்றது. மேலும் அரசியல் நெருக்கடியில் இருந்து அமெரிக்கா பாதுகாப்பளிக்கிறது. உலக வரலாற்றில் முதல் தடவையாக, இங்கே தான் எந்த செலவும் இல்லாமல் ஆக்கிரமிப்பு நடக்கின்றது.  இந்த நிலைமை மாற்றுவதற்கு இஸ்ரேலுக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும்.  
கேள்வி: இஸ்ரேலும், அமெரிக்காவும் பிரச்சினையை தீர்க்க விரும்பவில்லை என்றால், தீர்வு எங்கிருந்து வர வேண்டும்?
பதில்: பாலஸ்தீனர்களிடம் இருந்து.
அரபு வசந்தம் அவர்களை கடந்து போகும் வரையில் வாளாவிருப்பதையிட்டு, நாங்கள் புரிந்து கொள்ளலாம். 1967 இலிருந்து, ஐம்பது வருட ஆக்கிரமிப்பு காரணமாக, மக்கள் முடமாக்கப்  பட்டுள்ளனர். பாலஸ்தீனியர்கள் மனோவியல் ரீதியாக ஒரு வெறுமையை உணர்கின்றனர். மேற்கு ஜோர்டான் நதிக்கரையில், இஸ்ரேல், அமெரிக்காவின் பணத்தில் இயங்கும் ஒரு நிர்வாகத்தினால், அவர்களுக்கு எந்தப் பயனுமில்லை. அத்துடன் பாலஸ்தீனர்களை அடக்கி வைப்பதே அதன் தலையாய கடமையாக இருக்கிறது. ஆனால் பாலஸ்தீனர்கள், அவர்களது  தளர்நிலையில்  இருந்து வெளியே வர வேண்டும். அவர்கள் காந்தி வழியில் சாத்வீகப் போராட்டத்தின் மூலம் எதிர்ப்பைக் காட்ட வேண்டும்.  எப்படி? தடை செய்யப்பட்ட தடுப்புச் சுவரை நோக்கிய நடைப்பயணம் ஒன்றை நான் முன்வைக்கிறேன். இஸ்ரேல் கட்டியுள்ள தடுப்புச் சுவர் சட்டவிரோதமானது என்றும், சர்வதேச சமூகம் அதனை உடைத்து விழுத்த வேண்டும் என்றும்,  2004 ம் ஆண்டு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. சர்வதேச நீதிமன்றம் ஒரு கையில் சர்வதேச நீதிமன்றத்தின் ஆணையை வைத்திருக்க வேண்டும். மற்றக் கையில் சுத்தியலை வைத்திருக்க வேண்டும். மூச்சைப் பிடித்துக் கொண்டு பின்வாங்காமல் போராட வேண்டும். இஸ்ரேல் 100.000 பேரை அடக்கலாம். சிலநேரம் 200.000. ஆனால், அந்தப் படங்கள் எல்லாம் உலகம் முழுவதும் பரவும். சர்வதேச சமூகம் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு ஏற்படும். அது இஸ்ரேலுக்கு பதில் கூற முடியாத நிலைமையை உருவாக்கும். அப்படியே ஆக்கிரப்புச் செலவு அதன் தலை மேல் இறங்கும். அதற்குப் பிறகு இஸ்ரேல் தானாகவே வழிக்கு வரும். 

நன்றிhttp://kalaiy.blogspot.com
Twitter Bird Gadget