Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Monday, July 22, 2013

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் வரலாறு முடிவு



சிரேஷ்ட எகிப்திய அரசியல் அவதானி அஷ்ரப் பயூமி, இக்னா செய்தி வலையமைப்புக்கு வழங்கியுள்ள நேர்காணலில், பல மில்லியன் எகிப்திய மக்கள், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் கொள்கைகள் தொடர்பில் அதிருப்தியுற்றே வீதிகளில் இறங்கிப் போராடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வாஷிங்டன் டிசியில் வசிக்கும் பயூமி மேலும் தெரிவிக்கையில், எகிப்தின் நிலைமையும் அங்கு இடம்பெற்று வரும் நிகழ்வுகளும் கிளர்ச்சியாக அல்லது புரட்சியாக அல்லது அமெரிக்க ஊடகங்களுக்கான சவாலாக பெயரிடப்படக்கூடும் என்றார்.

இதற்கு என்ன பெயர் வைப்பது என்பது முக்கியமல்ல என நான் நினைக்கிறேன். முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஆட்சிக்கெதிராக 22 மில்லியன் எகிப்திய மக்களென்னும் மாபெரும் மக்கள் அணியினர் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர் என்பது மட்டும் உண்மையாகும். இம்மக்களின் கோரிக்கை, முர்சியின் அரசாங்கம் ஜனவரி 25, 2011 புரட்சியின் குறிக்கோள்களை அடையத் தவறியுள்ளமையினால் மீண்டுமொரு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதாகும்.
ஜூன் 30ம் திகதி எகிப்தில் இடம்பெற்றது வெறும் புரட்சி மட்டுமல்ல, மாறாக அது, இஸ்ரேலையும் அமெரிக்காவையும் அவற்றின் கொள்கையையும் நோக்கிச் சென்று கொண்டிருந்த முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் கொள்கைகளுக்கெதிரான மாபெரும் இந்திபாதாவாகும்.

நாட்டின் குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்கு ஒரு வருடம் என்பது பூர்த்தியான காலமல்ல என்ற போதிலும், அரசாங்கம் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான சரியான திசையில் சென்று கொண்டிருக்கின்றதா என்பதைக் கண்டறிவதற்கு ஒரு வருடம் என்பது மக்களுக்குப் போதுமானதாகும் எனவும் பயூமி குறிப்பிட்டுள்ளார்.

எனவே, புரட்சியாளர்களின் தேவையாக இருந்த அம்சங்களுக்கு எதிரான பாதையில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ஆட்சியை நகர்த்திச் செல்கின்றது என்ற முடிவுக்கு எகிப்திய மக்கள் வந்திருந்தனர்.

இதனாலேயே ஜனவரி 25 எழுச்சியை விடவும் பாரியளவில் ஜூன் 30 எழுச்சியில் எகிப்திய மக்கள் பங்குகொண்டனர்.

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு இப்பிராந்தியத்தில் அமெரிக்க கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கியமையே முர்சியின் அரசாங்கத்தை மக்கள் வீழ்த்துவதற்குப் பிரதான காரணமாயிற்று.

கேம்ப் டேவிட் ஒப்பந்தங்களை உறுதிப்படுத்தியமையும், ஷிமன் பெரசுக்கு முர்சி எழுதிய கடிதமும் முர்சியின் அரசாங்கம் அமெரிக்க சார்பு அரசாங்கம் என்பதைப் பிரகடனம் செய்வதாக அமைந்தன எனவும் பயூமி குறிப்பிட்டார்.

பலஸ்தீன விவகாரத்தில் முர்சியின் ஒத்துழைப்பின்மை, முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் சர்வாதிகாரப்போக்கு, அரசாங்க நிறுவனங்களில் மக்களின் வெறுப்புக்குரியவர்கள் தலைவர்களாக நியமிக்கப்பட்டமை, சிரியா விவகாரத்தில் முர்சியின் நியாயமற்ற போக்கு, அசாதுக்கு எதிரான குழுவுடன் முர்சி இணைந்து கொண்டமை போன்றனவும் முர்சியின் அரசாங்கத்தின் மீது மக்கள் சீற்றம் கொள்ளக் காரணமாக அமைந்தன.

மற்றொரு காரணம், கடந்த மாதத்தில் எகிப்தில் இடம்பெற்ற ஷீஆ முஸ்லிம்கள் மீதான படுகொலை நடவடிக்கைகளாகும். சலபிகளினால் முடுக்கி விடப்பட்ட இப்படுகொலை நடவடிக்கைகள் தொடர்பான கூட்டங்களில் முர்சியும் கலந்து கொண்டிருந்தார்.

எகிப்திய மக்கள், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை நிராகரித்து விட்டு ஆட்சி அமைக்க முடியுமா எனக் கேட்கப்பட்ட போது பதிலளித்த பயூமி, முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஆதரவாளர்களும் சலபிகளும் இணைந்து எகிப்து மக்களின் மொத்த சனத்தொகையில் 25 வீதமே உள்ளனர் என்பதனால் அவர்களால் பாரிய ஆபத்துகளை அம்மக்களுக்கு ஏற்படுத்த முடியாது என்றார்.

Sunday, November 1, 2009

இலங்கை முஸ்லிம்கள் மீதான விடுதலைப் புலிகளின் கொடுமைகள்


சிங்களப் பேரினவாதத்தின் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறுதல் எனும் தூரநோக்கோடு ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் போராட்டங்களில் இறுதியாக நிலைத்து நின்றது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டும்தான்.

ஆயினும், சிறுபான்மையினர் போராட்டமாக உருவெடுத்த விடுதலைப் புலிகள் அமைப்பு, பின்னர் மற்றொரு சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகத்தின் மீது கொடுமைகளையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்து விட்டமையே அதன் அழிவுக்குக் காரணமாயமைந்தது.

விடுதலைப் புலிகள், முஸ்லிம் சமூகத்தை நசுக்க ஆரம்பிக்கும் வரைக்கும், அவர்களது போராட்டத்துக்கு தமது உடல், பொருளால் முஸ்லிம்கள் பெரும் உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கி வந்துள்ளார்கள். ஆரம்ப கட்டங்களில், புலிகளின் முன்னணி வீரர்களாக நின்று போராடியவர்கள் முஸ்லிம்களே. புலி உறுப்பினர்களை, இந்திய இராணுவத்திடமிருந்தும் இலங்கை இராணுவத்திடமிருந்தும் பாதுகாத்துக் காப்பாற்றி வந்தவர்களும் முஸ்லிம்களே. புலிகள் வருமானமின்றி நாதியற்றுத் திரிந்த காலப்பகுதிகளில், தமது மாடுகள், வயல் விளைச்சல்கள், வர்த்தகப் பண்டங்கள், பொருளாதாரங்கள், ஆளணியினர் என பலவகையிலும் உதவியவர்கள் முஸ்லிம்களே.

எனினும், முஸ்லிம்களை தமது இனமொன்றாகக் கருதாது, அவர்களை இரண்டாந்தரமாகவே கருதி வந்த புலிகள், கிடைத்த சந்தர்ப்பங்களில் அவர்கள் மீது படுகொலைகளையும் கொடுமைகளையும் கட்டவிழ்த்து விட்ட போதே, முஸ்லிம்கள் விழித்துக் கொண்டனர். புலிகளுக்கான தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் முழுமையாக வாபஸ் பெற்றனர்.

அதன்பின், முஸ்லிம்களின் பகிரங்க விரோதிகளாகிப் போன புலிகள், அம்முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடுமைகளும் வன்முறைகளும் மிகக் குரூரமானவை.

ஏறாவூர் நகரில், எல்லைக் கிராமங்களில், தூங்கிக் கொண்டிருந்த முஸ்லிம் மக்களின் கதவுகளை உடைத்து, ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த புலிகள், அங்கு உறக்கத்திலிருந்த மக்களை சுட்டுக் கொன்றனர். கற்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து, சிசுவை வெளியே இழுத்தெடுத்து, சுவரில் அடித்துக் கொன்றனர். அன்று படுகொலை செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கை 201. இவர்களுள் கற்பழிக்கப்பட்ட யுவதிகளும், கழுத்தறுக்கப்பட்ட இளைஞர்களும் அதிகம். குழந்தைகள், சிறுவர்கள், வயோதிபர்கள் பெண்கள் என்ற எவ்வித வேறுபாடுமின்றி புலிகளினால் இப்படுகொலை அரங்கேற்றப்பட்டது.

காத்தான்குடி நகரில், பள்ளிவாயலொன்றில் தொழுகையிலிருந்த மக்களை புலிகள் புறமுதுகில் சுட்டுக் கொன்றனர். இதில், சிறுவர்கள் பெரியோர்கள் உள்ளடங்கலாக 213 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

அழிஞ்சிப் பொத்தானை எனும் கிராமத்தில், ஓர் நள்ளிரவில், ஆயுதங்களுடன் உட்புகுந்த விடுதலைப் புலிகள், அங்கிருந்த மக்களை சுட்டும் வெட்டியும் கொன்று குவித்தனர். இதில் பலியானோரின் எண்ணிக்கை 77.

முஸ்லிம் காலனி மக்களில் 56 பேர், புனித மக்கா நகருக்குச் சென்று தமது ஹஜ் கடமைகளை நிறைவேற்றி விட்டு, பரிசுத்தமான நிலையில் ஊர் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது, வழிமறித்த புலிகள், அவர்கள் அனைவரையும் வாகனத்திலிருந்து இறக்கி, வரிசையாக நிறுத்தி வைத்து, கண்களையும் கைகளையும் கட்டி விட்டு, நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொன்றனர். வாகனத்தையும் தீயிட்டுக் கொழுத்தினர்.

வடக்கில், பூர்வீகமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களை, ஒரே இரவில், புலிகள் அச்சுறுத்தி வெளியேற்றினர். வெளியேற மறுத்தவர்களை அடித்துத் துன்புறுத்தினர். ஐம்பது ரூபா பணமும் ஒரு மாற்றுடையும் தவிர எதனையும் கொண்டு செல்ல முடியாது என்று நிபந்தனை விதித்தனர். தமது பூர்வீக மண், தமது வயல் நிலங்கள், தமது வீடுகள், சொத்து சுகங்கள், கோடிக்கணக்கான வர்த்தகப் பொருட்கள் அனைத்தையும் பறித்தெடுத்துக் கொண்டு அந்த வடபுலத்து முஸ்லிம்களை அகதிகளாக விரட்டியடித்தனர் இந்தப் புலிகள்.

மூதூரில், சமூக சேவைகளில் ஈடுபாடு காட்டி வரும் முஸ்லிம் இளைஞர்களை இனங்கண்டு, அவர்கள் அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்று, வரிசையில் நிறுத்தி வைத்து சுட்டுக் கொன்றனர். 25க்கும் அதிகமான துடிப்பான முஸ்லிம் இளைஞர்கள் இதன்போது படுகொலை செய்யப்பட்டனர்.

Thursday, October 1, 2009

கிழக்கிலங்கை முஸ்லிம்களின் காணிகள் அபகரிப்பு


பூதாகரமாக உருவெடுத்திருக்கும் கிழக்குமாகாண முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைக்கு கிழக்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள், முஸ்லிம் அமைச்சர்கள், மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் எவ்வாறு கிழக்கு முஸ்லிம்களுக்குத் தீர்வை பெற்றுக் கொடுக்கப்போகிறார்கள். என்பதை கிழக்கு முஸ்லிம் சமூகம் அச்சமடைந்த நிலையில் மிக உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது.

Tuesday, September 1, 2009

விடுதலைப் போராட்டமும் ஜனநாயக நீரோட்டமும்




இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பமாகி பல மாதங்கள் கடந்து விட்டன. சுமுகமான தீர்வோ, தீர்வுக்கான அறிகுறியோ இதுவரை தென்படவில்லை என்ற நிலை ஒரு புறமிருக்க, இந்தப் பேச்சுவார்த்தைகளில், முஸ்லிம்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றனர் என்பதுதான் கவனத்திற் கொள்ளத்தக்கது.

பேச்சுவார்த்தை மேசைகளில் முஸ்லிம் பிரசன்னத்தைத் தடுக்கின்ற விடயத்தில், அரசும் புலிகளும் மிக்க அவதானத்துடனும், தந்திரோபாயத்துடனும் காய்களை நகர்த்துகின்ற அதேவேளை, தமது செயலை வெளியுலகுக்கு நியாயமானதெனக் காண்பிக்கும் விடயத்திலும் அதிக பியரத்தனத்துடன் செயற்பட்டு வருகின்றன.

Saturday, August 1, 2009

ஈராக்கில் அமெரிக்காவின் இழப்புகளும் அவமானங்களும்


கடந்த 2002ம் ஆண்டு, ஐ.நா. சபையினதும், பெரும்பாலான உலக நாடுகளினதும் ஒட்டுமொத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும் மீறி, ஈராக்கில் போர் தொடுத்தது அமெரிக்கா. பேரழிவு தரும் ஆயுதங்களைக் களைந்து, பிராந்தியத்தில் அச்சுறுத்தலற்ற சுமுக நிலையை ஏற்படுத்துவதென்ற கோஷத்தை முன்னிறுத்தி, தன் அதிகார மமதையினூடாக அமெரிக்கா மேற்கொண்ட இந்த யுத்தம் ஐந்து வருடங்களையும் தாண்டியும் இன்னும் நிறைவுறாது விஸ்வரூபமெடுத்து நிற்கின்றது. சதாம் ஹுஸைனைக் கைப்பற்றினால் ஈராக்கைத் தம் முழுமையான அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து விடலாம், போரையும் முடிவுறுத்தி விடலாம் என்பது அமெரிக்காவின் கற்பனையாக இருந்தது. ஆனால், சதாம் கைப்பற்றப்பட்ட பின்பும், அவர் தூக்கிலிடப்பட்ட பின்பும் ஈராக்கில் தொடர்ந்து இடம்பெறும் வன்முறைகளும், அமெரிக்க இராணுவத்தினரின் தொடர் உயிரிழப்புகளும் அமெரிக்காவைப் பெரும் ஏமாற்றத்திற்குள்ளாக்கி உள்ளதோடு, ஈராக்கின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக, தனது பரம வைரியான ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய பின்னடைவான நிர்ப்பந்தத்திற்குள்ளும் அதனை உள்ளாக்கியுள்ளன.

சர்வதேச ரீதியாக மிகப்பெரும் அதிகாரமும், மிக வலுவான இராணுவ சக்தியும், நவீன தொழில் நுட்பங்களை உள்ளடக்கிய பெருந்தொகையான ஆயுதத் தளபாடங்களையும் கொண்டுள்ள அமெரிக்கா, இவை எல்லாவற்றிலும் மிகப் பின்தங்கியுள்ள ஈராக்கிய ஆயுதக் குழுக்களையும் பொதுமக்களையும் வெற்றி கொள்ள முடியாமல், தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களிலும், கார்க்குண்டு வெடிப்புகளிலும் கெரில்லாச் சண்டைகளிலும் தன் படைவீரர்களை ஒருவர் பின்னொருவராக இழந்து கொண்டிருப்பது, சர்வதேச சமூகத்தின் மத்தியில் மிகப்பெரும் அவமானத்தையும், இழிவையும் அந்நாட்டுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
Twitter Bird Gadget