அன்பிலும் அறிவிலும் ஆகாயம் - பாசம்
அளவற்றுப் பொழிகின்ற விண்மேகம்
பொறுமையில் நிகரற்ற நற்பூமி - என்றும்
பொதுநலனில் உயிர்வாழும் பௌர்ணமி
அரணாகி அரவணைக்கும் மலைச்சாரல் - மன
அழுக்குகளை அகற்றுகின்ற மழைத்தூறல்
எம்மனமும் உயர்ந்து நோக்கும் விண்ணுலகம் - அந்த
அம்மாவே என்றென்றும் என்னுலகம்!
2 comments:
it's a wonderful poem
Really I appreciate you
Thanks Binthul
Post a Comment