Wednesday, August 25, 2010

லெபனான் பிரதமரின் படுகொலையில் ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தைத் தொடர்புபடுத்தி விட சவூதி மன்னர் முயற்சி


லெபனானின் ஹிஸ்புல்லாஹ் இயக்கத் தலைவர் செய்யித் ஹஸன் நஸ்ருல்லாஹ் (வலது) மற்றும் படுகொலை செய்யப்பட்ட லெபனானின் முன்னாள் பிரதமர் ரபீக் ஹரீரி


லெபனானின் மன்னாள் பிரதமர் ரபீக் ஹரீரியின் படுகொலையில் ஹிஸ்புல்லாஹ் அமைப்பை தொடர்புபடுத்தி விடுவதற்காக, சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளார் எனும் அதிர்ச்சித் தகவலை அண்மைய அறிக்கையொன்று வெளியிட்டுள்ளது.

ஹரீரின் கொலை தொடர்பான புதிய ஆதாரங்கள் ஹிஸ்புல்லாஹ் அமைப்பிடம் இருப்பதாகவும், அவற்றை வெளியிட்டால் சவூதி அரேபியாவின் ரோயல் குடும்பமான அல்சஉத் பெரும் இழப்பை சந்திக்கும் எனவும் லெபனானின் சுதந்திர தேசப்பற்று இயக்கம் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.

லெபனானின் சமாதானம் மற்றும் ஐக்கியம் என்பவற்றை நிலைநிறுத்துவதற்கான நஸ்ருல்லாஹ்வின் ஈடுபாடு, இவ்வாதாரங்களை வெளியிட விடாமல் அவரைத் தடுக்கின்றன எனவும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

சவூதி மன்னர் அப்துல்லாஹ், லெபனானின் ஹிஸ்புல்லாஹ் அமைப்புக்கு எதிரான பிரசாரங்களை முடுக்கி விடுவதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளார். சவூதியின் குறிக்கோள் ஹிஸ்புல்லாஹ் அமைப்பை நிர்மூலமாக்குவது மட்டுமன்றி, செய்யித் ஹஸன் நஸ்ருல்லாஹ் அவர்களின் அந்தஸ்தை சர்வதேச அளவில் அரபுலகிலும் மலினப்படுத்துவதுமாகும் என சவூதி எதிர்க்கட்சி அதிகாரியொருவரை மேற்கோள் காட்டி இந்த லெபனானிய இணையத்தளம் தெரிவிக்கின்றது.

லெபனானின் தற்போதைய பிரதமர் சஅத் ஹரீரியின் தந்தையான ரபீக் ஹரீரி, 2005 பெப்ரவரியில் இடம்பெற்ற மிக மோசமான கார் விபத்தொன்றில் கொல்லப்பட்டார்.

ஐ.நா. மற்றும் லெபனான் அரசாங்கத்தினால் 2007ல் நிறுவப்பட்ட லெபனானுக்கான விசேட விசாரணைக்குழு, இந்த படுகொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதேவேளை, 2005ல் இடம்பெற்ற இக்கார்க் குண்டு வெடிப்பில் இஸ்ரேலின் பங்கு தொடர்பாக உறுதிப்படுத்தும் வலுவான ஆதாரமொன்றை செய்யித் ஹஸன் நஸ்ருல்லாஹ் கடந்த வாரம் விசாரணைக் குழுவுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


செய்தி: www.presstv.com

No comments:

Twitter Bird Gadget