"அய்யாயிரம் பேருக்கு மாப்புள்ளச் சாப்பாடு தரணும்"
"இருக்கிற ஊட்ட இடிச்சிப் போட்டு அந்த இடத்தில மூணு கட கட்டித் தரணும்"
"பின் வளவுக்குள்ள ரெண்டு மாடி ஊடு கட்டி மாபிள் பதிச்சி ஏசியும் பூட்டித் தரணும்"
"புது செல்போன் ஒண்டும் மடிக்கிற கம்ப்யூட்டர் ஒண்டும் வாங்கித் தரணும்"
"மாப்புள்ளட தங்கச்சிக்கு ஒரு ஊடு கட்டித் தரணும்"
"ஒரு வருஷத்துக்கு மாப்புள்ளெய்க்கு சாப்பாடு குடுக்கணும்"
"இதிவ்வளவுக்கும் சம்மதமெண்டா, எங்கட புள்ளெய உங்களுக்கு மாப்புள்ளெயாத் தாறம்"
* * *
"உங்களுக்கு என்ன தகுதி இருக்குதெண்டு நினைச்சிக்கிட்டு எங்கட மாப்புள்ளெயக் கேட்டு வந்திருக்கீங்க?"
"மெயின்ல ஊடும் ஹாட்வெயார் கடெயும் வெச்சிருந்தா பெரியாக்களெண்டு நெனப்பாக்கும்"
* * *
"இப்பிடி மாசாலமா கத்தினா நாங்க மயங்கிடுவம் எண்டு நினெச்சீங்களோ?"
"சும்மா பொழுது போக்கு மாதிரி எங்கட புள்ள உங்கட ஊட்ட வந்து உங்கட புள்ளெக்கிட்ட கதெச்சிப் பழகியிருப்பாரு. அதுக்காக அள்ளிப் புடிச்சிக்கிட்டு கலியாணங் கேட்டு வந்துருவீங்களா?"
* * *
"மாப்புள்ள என்ன வேல பாக்காருடி?"
"ஆறு மாசத்துக்கு முதல்ல, மௌலவி டீச்சிங் குடுத்தாங்கல்லா, அதில வேல கிடெச்சி ஸ்கூல்ல மாஸ்டரா இருக்காராம்"
"பெரிய பணக்காரக் குடும்பமோ?"
"ச்சேச்சே... இருக்கிறதுக்கு சொந்தமா ஊடு கூட இல்ல. காலமெல்லாம் வாடக ஊடுதான்"
"அப்ப, ஊர்ல நல்ல கௌரவமான குடும்பமா?"
"தோண்டிப் பாத்தா, ஊரே நாறிப் போகும், அவ்வளவு பீத்தல்"
"அப்ப என்னத்துக்கு ராத்தா, மாப்புள்ள கேட்டு இப்பிடி அலையிறா?"
"என்ன செய்ய? மகள் ஆசப்பட்டுட்டே எண்டுதான் கஷ்டப்பர்ராவாக்கும். அவ்வளவுக்கு கதெச்சியே அவட புள்ளய மயக்கிப் போட்டான் போலக்கிடக்கு"
* * *
"அவரா? என்னையும் கலியாணங் கேட்டு வந்ததான! வயசு கூட, ஆள் கறுப்பு, மோசமான குடும்பமெண்டுதான் நான் வாணாண்ட. இப்ப என்ட மகளக் கேட்டு வந்தா, குடுப்பனா?"
* * *
"இந்த நாத்தப் புடிச்ச வாய வெச்சிக்கிட்டு எங்கட மகளயா கலியாணங் கேட்டு வாறாய்? போடா பேயன்..!"
* * *
"டேய், வாங்கடோவ்...! அந்தா போறாண்டா மாஸ்டர் பேயன்... ஹே.... ஹே.... ஹூ.... ஹூ...."
3 comments:
இப்படியெல்லாங் கூட நடக்குதா? தின்றத்துக்கு சோறும் குடுத்து, தங்கிறத்துக்கு ஊடும் குடுத்து, கடைசில படுக்கிறத்துக்கு ஆளும் குடுத்து, கலியாணங் கட்டினா, இந்த மாப்புள்ளைக்கு என்ன செய்யணும்? "அது" இருக்கிறத்தாலதான இவ்ளோ ஆட்டம் போடுறானுகள். அத அறுத்துப்புட்டா?
பெண்ணடிமைத்துவத்தை நீக்கும்படியான
கோஷங்களும் முனைப்புகளும்
எவ்வளவு தூரம் உயர எழுந்தாலும்,
அடிமனதில் நீறுபூத்த நெருப்பாக கவிழ்ந்து கிடப்பது
ஆணாதிக்கக் கொடூரங்கள்தான்.
சமயங்களைப் போதிப்பவர்களே
தமது தனிப்பட்ட மோசமான செயல்களினால்
அச்சமயத்துக்கு
அவப்பெயரையும் களங்கத்தையும்
ஏற்படுத்தி விடுகின்றார்கள்.
பெண்களின் நிலை
தொடர்ந்தும் அவலமாகவே இருந்து வருவது
வேதனையளிக்கிறது.
இங்கு இடம்பெறும் நிகழ்வுகளுக்கும்
இஸ்லாத்துக்கும்
எவ்வித சம்பந்தமுமில்லை என்று
சத்தமிட்டுக் கத்தினாலும்
யார் காதில் விழப்போகின்றது,
எல்லோரும்
காதுகளை இறுகப்
பொத்திக் கொண்டிருக்கும் போது?
சீதனக்கொடுமை பற்றி இவ்வளவு நக்கலாகவும் சூசகமாகவும் யாரும் சொன்னதில்லை ஸபீர்.
Post a Comment