“ஹலோ முனாஸ்! நோட்டிஸ் ரெடி பண்ணிட்டியா?”
“இல்லடா மச்சான், இன்னும் கொஞ்சம் இருக்கு. முடிஞ்சவுடன நானே உன்னக் கூப்பிர்ரன்”
“நாளைக்கு ஜும்ஆக்கு முதல்ல இஷூ பண்ணணுண்டா. அப்பதான் ஜும்ஆக்கு வாறவங்களுக்கு வாய்க்கு அவல் போட்ட மாதிரியிருக்கும், விஷயம் சிம்பிளா பத்திப் பரவிடும்”
“சரிடா, எப்படியும் இண்டைக்கு இஷாவுக்குப் புறவு கொண்டாந்து தாறதுக்கு ட்ரை பண்ணுறன்”
இஷாவுக்குப் பிறகு, கரீமின் வீட்டிலிருந்தான் முனாஸ்.
ஃபோட்டோ கொப்பி பண்ணப்பட்ட ஆயிரம் நோட்டிஸ்கள் அடங்கிய பொதியொன்று அவனது கையிலிருந்தது. அதிலிருந்து ஒன்றை உருவியெடுத்து வாசித்துப் பார்த்த கரீமின் முகத்தில் திருப்திப் புன்னகை பரவிக் கமழ்ந்தது.
“முனாஸ்! கை குடு மச்சான். நோட்டிஸ் பிரிபெயார் பண்றத்தில உன்ன அடிக்க ஆளே இல்லடா”
“புள்ளெட பேரையும் போட்டிருக்கிறதனால, விஷயம் கன்பாமெண்டு எல்லாரும் நினைச்சிக்குவாங்க. மாஸ்டர் வசமா மாட்டிக்குவாரு. பொம்பள விஷயந்தான ஒரால அடிச்சி விழுத்தாட்ட சுப்பர் ஆயுதம்"
"பொலிடிசியன் பின்னால் திரியிறத்தால பெரிய ஆளெண்டு நினப்பு அவருக்கு. அதுக்குத்தான் இந்த ஆப்பு”
“சரி அத விடு கரீம், எப்பிடி இத இஷூ பண்றது? ஏதாவது ஐடியா வெச்சிருக்கியா?”
“ரெண்டு பெர செட் பண்ணியிருக்கன். இரவைக்கு 12 மணிக்குப் புறவு வெளிக்கிட்டு, ஊர்ல எல்லா ரோட்லயும், பூத்தூவுற மாதிரி போட்டுட்டு வந்திருவானுகள். அவ்வளவுதான். நாளெக்கு காலைல பத்தியெரியும். மாஸ்டர்ர மானம் கப்பலேறும். அதுக்குப் புறவு பாப்பமே அவர்ர பொலிடிகல் பவர”
* * * * *
“என்ன சேர், ரெண்டு நாளா ஆளக் காணல்ல? நீங்க வராட்டி ஸ்கூலே வெறிச்சோடிப் போன மாதிரியிருக்கு”
“மினிஸ்டர்ர ஃபங்ஷன் ஒண்டு இருந்த சேர். அதில கொஞ்சம் வேலயாப் பெய்த்து. அதுதான் ரெண்டு நாளா வரல்ல. அதிருக்க, நேத்து ஸ்டாஃப் மீட்டிங்ல என்ன முடிவெடுத்த?”
“ஒண்டும் உருப்படியா இல்ல சேர். உங்களத்தான் அக்டிங் போடணுமெண்டு நானும் கரீம் சேரும் எவ்வளவோ சொல்லிப் பாத்தம். ஒருத்தரும் சப்போர்ட் பண்ணல்ல”
“சரி விடுங்க சேர். எத்தினயப் பாத்திட்டம். இண்டைக்கும் என்னமோ நோட்ஸ் அடிச்சிருக்கானுகளாம். வேல இல்லாதவனுகள். உங்களப் போல கொஞ்சப் பேராவது எனக்கு சப்போர்ட்டா இருக்கிறீங்களே, அது போதும். ஓகே முனாஸ் சேர், பெல்லடிச்சி மிச்ச நேரமாயிட்டு, கிளாசுக்குப் போவமா?”
2 comments:
hii..
Nice Post Great job.
Thanks for sharing.
என்ன சேர் அனுபவப் பட்டமதிரி இருக்கு. நல்லகதை
முஸ்டீன்
Post a Comment