“வெண்டாலும் தோத்தாலும் நான் எம்பிதான். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நான் அமைச்சர்தான்”
ஒவ்வொரு தேர்தலிலும் இவ்வாறு நெஞ்சுயர்த்திப் பிரகடனம் செய்வதற்கு ஜிப்ரி மாஸ்டருக்கு எவ்வளவு தன்னம்பிக்கையும் தந்திரமும் இருக்க வேண்டும்.
வார்த்தை ஜாலங்களில் வாக்காளர்களைக் கட்டிப்போடும் வாய்ச்சொல் வீரன், இலக்கியச் செம்மல்களின் இறுமாப்பைத் துடைத்தெறியும் சொற்போர் மன்னன் என்றெல்லாம் புகழப்படும் ஜிப்ரி மாஸ்டருக்கு சிறப்புப் பெயர்களோ ஏராளம்.
அவருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புப் பெயர்களும் அவற்றுக்கான காரணங்களும் பின்வருமாறு:
சோற்று மாடு: நாளின் அதிக நேரத்தை வயிறு புடைக்கச் சாப்பிட்டுப் பெருத்த ஏப்பத்துடன் தூங்குவதிலேயே கழிப்பதனால்.
வள்ளல் பரம்பரை: நூல் வெளியீட்டு விழாக்களில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஐநூறு ரூபா மட்டுமே அன்பளிப்புச் செய்வதனால்.
அடிக்கல் அமைச்சர்: எல்லா அபிவிருத்தி மற்றும் நிர்மாணப் பணிகளையும் அடிக்கல் நட்டு முடித்து வைப்பதனால்.
வெற்றி அறியா வீரன்: எல்லாத் தேர்தலிலும் தோற்பதே வழக்கமென்றாலும், எந்தத் தேர்தலுக்குப் பின்னும் எம்பியாகாது விட்டதில்லை என்பதனால்.
இவை தவிர, குறித்த சந்தர்ப்பமொன்றை அடிப்படையாகக் கொண்டு சூட்டப்பட்ட பண்புப் பெயர்களும் ஏராளமுள்ளன. அவ்வாறு அவருக்கு சூட்டப்பட்ட பெயர்களும் அவற்றுக்கான சந்தர்ப்பங்களும் பின்வருமாறு:
கறார் காரியாலயன்: விபத்திற்குள்ளாகி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒருவரை உடனடியாக கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல ஹெலிகப்டர் வசதி ஒழுங்கு பண்ணித் தருமாறு ஊர் மக்கள் கேட்ட போது, சனி ஞாயிறு விடுமுறை தினங்களில் இப்படியான காரியாலய வேலைகளைப் பார்க்க முடியாது எனக் கை விரித்த சந்தர்ப்பத்தில்.
மண்ணின் மைந்தன்: ஊர் மக்கள் இலகுவாக சேவை பெற்று வந்த மின்சார சபை காரியாலயத்தை ஊரிலிருந்து அப்புறப்படுத்தி தூர இடமொன்றுக்குத் துரத்தியடித்த சந்தர்ப்பத்தில்.
விடுதலைப் போராளி: தாம் எதிர்நோக்கும் புலிகளின் தொல்லை மற்றும் அச்சுறுத்தல் பற்றி முறையிடச் சென்ற ஊர் மக்களுக்கு, ஊரிலிருக்கும் உங்கள் சொத்துகளை வேறிடத்திற்கு நகர்த்துங்கள் என்று முக்கிய ஆலோசனையொன்றை மலர்ந்தருளிய சந்தர்ப்பத்தில்.
காட்டிக் கொடுக்காத கரம்: பழையவர்கள் மற்றும் பங்களிப்புச் செய்தவர்கள் எல்லோரையும் ஓரங்கட்டித் துரத்தியடித்து விட்டு, கட்சியையும் கட்சித் தலைவரையும் தன் கட்டுக்குள் கொணர்ந்த சந்தர்ப்பத்தில்.
நரிக் குரங்கர்: பள்ளிகளில் பாங்கு சொல்ல முடியாது போகும், முஸ்லிம்களுக்கெதிராகவும் போர் தொடங்கும் என்றெல்லாம் யாரைப் பற்றி மக்களை எச்சரித்தாரோ, அவருடன், அவரது தேர்தல் வெற்றிக்குப் பின் கூட்டணி சேர்ந்து அமைச்சராகி அதி வேக காரொன்றை ஊருக்குள் கொணர்ந்த சந்தர்ப்பத்தில்.
ஜிப்ரி மாஸ்டரின் புகழும் கீர்த்தியும் சிறுகதைகளிலோ நாவல்களிலோ அடங்கிடாத காட்டாற்று வெள்ளம் போன்றவை என்பது உண்மைதான். எனினும், அவரது பழங்காலத் தோழர்களுள் ஒருவரின் பின்வரும் கூற்று இவ்வுண்மையை மறுத்து நிற்கின்றது:
“மேடைகளில் வீர முழக்கமிடுவது, கட்டடங்களுக்கு அடிக்கல் நடுவது, உண்டு நிரப்பித் தூங்கிக் கழிப்பது இவற்றைத் தவிர அவருக்கு வேறென்ன தெரியும்!”.
ஒவ்வொரு தேர்தலிலும் இவ்வாறு நெஞ்சுயர்த்திப் பிரகடனம் செய்வதற்கு ஜிப்ரி மாஸ்டருக்கு எவ்வளவு தன்னம்பிக்கையும் தந்திரமும் இருக்க வேண்டும்.
வார்த்தை ஜாலங்களில் வாக்காளர்களைக் கட்டிப்போடும் வாய்ச்சொல் வீரன், இலக்கியச் செம்மல்களின் இறுமாப்பைத் துடைத்தெறியும் சொற்போர் மன்னன் என்றெல்லாம் புகழப்படும் ஜிப்ரி மாஸ்டருக்கு சிறப்புப் பெயர்களோ ஏராளம்.
அவருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புப் பெயர்களும் அவற்றுக்கான காரணங்களும் பின்வருமாறு:
சோற்று மாடு: நாளின் அதிக நேரத்தை வயிறு புடைக்கச் சாப்பிட்டுப் பெருத்த ஏப்பத்துடன் தூங்குவதிலேயே கழிப்பதனால்.
வள்ளல் பரம்பரை: நூல் வெளியீட்டு விழாக்களில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஐநூறு ரூபா மட்டுமே அன்பளிப்புச் செய்வதனால்.
அடிக்கல் அமைச்சர்: எல்லா அபிவிருத்தி மற்றும் நிர்மாணப் பணிகளையும் அடிக்கல் நட்டு முடித்து வைப்பதனால்.
வெற்றி அறியா வீரன்: எல்லாத் தேர்தலிலும் தோற்பதே வழக்கமென்றாலும், எந்தத் தேர்தலுக்குப் பின்னும் எம்பியாகாது விட்டதில்லை என்பதனால்.
இவை தவிர, குறித்த சந்தர்ப்பமொன்றை அடிப்படையாகக் கொண்டு சூட்டப்பட்ட பண்புப் பெயர்களும் ஏராளமுள்ளன. அவ்வாறு அவருக்கு சூட்டப்பட்ட பெயர்களும் அவற்றுக்கான சந்தர்ப்பங்களும் பின்வருமாறு:
கறார் காரியாலயன்: விபத்திற்குள்ளாகி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒருவரை உடனடியாக கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல ஹெலிகப்டர் வசதி ஒழுங்கு பண்ணித் தருமாறு ஊர் மக்கள் கேட்ட போது, சனி ஞாயிறு விடுமுறை தினங்களில் இப்படியான காரியாலய வேலைகளைப் பார்க்க முடியாது எனக் கை விரித்த சந்தர்ப்பத்தில்.
மண்ணின் மைந்தன்: ஊர் மக்கள் இலகுவாக சேவை பெற்று வந்த மின்சார சபை காரியாலயத்தை ஊரிலிருந்து அப்புறப்படுத்தி தூர இடமொன்றுக்குத் துரத்தியடித்த சந்தர்ப்பத்தில்.
விடுதலைப் போராளி: தாம் எதிர்நோக்கும் புலிகளின் தொல்லை மற்றும் அச்சுறுத்தல் பற்றி முறையிடச் சென்ற ஊர் மக்களுக்கு, ஊரிலிருக்கும் உங்கள் சொத்துகளை வேறிடத்திற்கு நகர்த்துங்கள் என்று முக்கிய ஆலோசனையொன்றை மலர்ந்தருளிய சந்தர்ப்பத்தில்.
காட்டிக் கொடுக்காத கரம்: பழையவர்கள் மற்றும் பங்களிப்புச் செய்தவர்கள் எல்லோரையும் ஓரங்கட்டித் துரத்தியடித்து விட்டு, கட்சியையும் கட்சித் தலைவரையும் தன் கட்டுக்குள் கொணர்ந்த சந்தர்ப்பத்தில்.
நரிக் குரங்கர்: பள்ளிகளில் பாங்கு சொல்ல முடியாது போகும், முஸ்லிம்களுக்கெதிராகவும் போர் தொடங்கும் என்றெல்லாம் யாரைப் பற்றி மக்களை எச்சரித்தாரோ, அவருடன், அவரது தேர்தல் வெற்றிக்குப் பின் கூட்டணி சேர்ந்து அமைச்சராகி அதி வேக காரொன்றை ஊருக்குள் கொணர்ந்த சந்தர்ப்பத்தில்.
ஜிப்ரி மாஸ்டரின் புகழும் கீர்த்தியும் சிறுகதைகளிலோ நாவல்களிலோ அடங்கிடாத காட்டாற்று வெள்ளம் போன்றவை என்பது உண்மைதான். எனினும், அவரது பழங்காலத் தோழர்களுள் ஒருவரின் பின்வரும் கூற்று இவ்வுண்மையை மறுத்து நிற்கின்றது:
“மேடைகளில் வீர முழக்கமிடுவது, கட்டடங்களுக்கு அடிக்கல் நடுவது, உண்டு நிரப்பித் தூங்கிக் கழிப்பது இவற்றைத் தவிர அவருக்கு வேறென்ன தெரியும்!”.
27 comments:
நான் செய்யாத எல்லா விஷயங்களையும் கட்டுக்கதையாக ஞாபகத்தில் வைத்திருப்பதும், ஒரு ஹாபிஸ் தனம்தான் என்பதை நிறுவியுள்ளீர்கள் என்பதையிட்டு மகிழ்ச்சிதான். ஆனால் என்னுடைய நினைவில் மண்ணள்ளிப்போட்டது உங்கள் பார்வை. அது எதுவெனில், ஏறாவூரில் விரல்விட்டு எண்ணக்கூடிய மாற்று சிந்தனையாளர்களில் ஒருவராக உங்களை அடையாளம் கண்டிருந்தேன். அது நினைவல்ல. கனவு என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.
வெற்று உணர்ச்சிகளை கோஷங்களாக்கி அவற்றை அரசியல் நிலைப்பாடுகளாகவும் மாற்றியபடி வளர்ந்துவந்த முஸ்லிம் தேசிய அரசியலில் ஒரு குறுக்கீடாக வந்தவன் இந்த இடைச்சாதி ஜிப்ரி மாஸ்டர். இதனைப் புரிந்துகொண்டு என்னை ஆதரித்த ஏறாவூர் மண் ஈன்றெடுத்த ஓர் இளம் புத்திஜீவி நீங்கள் என்ற என் முடிவு பிழையானது என்பதையும் பிற்காலங்களில் நீங்கள் ஓர் ஒட்டு மாமரத்தடி ஒட்டுண்ணியாகிவிட்டீர் என்பதையுமே காட்டுகிறது. நான் கவிஞனுமில்லை, நல்ல கதைஞனுமில்லை. கைவினைஞனுமில்லை. இளைஞனுமில்லை. சின்ன வாசகன் மட்டுமே நீங்கள் சொன்னபடி....
எப்படிக்கும் படிக்கும் எல்லோருக்கும் இப்படிக்கு ஜிப்ரி மாஸ்டர்.
என்ன சார் நடக்குது?
very nice comment
பசீர் காக்கா சபீர் ஹாபீஸ் எழுதியது 100% சரிதான் காக்கா. உங்களுக்கு யார் என்ன சொன்னாலும் எரும மாட்டுக்கு மேல் மழை பெய்வது மாதிரி . நீங்க பேசாம படுத்து தூங்குங்க .
என்ன நடக்கிதப்பா இங்கே....? இப்பிடியும் ஒரு போரா...? யாரு இந்த ஸபிர் ஹாபிஸ்? அவர் எழுதியது 100 வீதம் சரி என்று பெயரை மறைத்துக் கருத்து வெளியிட்டிருக்கும் முட்டாள் யாரு...? உங்களின் நோக்கம்தான் என்னங்க...? ஏன் இத்தனை குரோதம்? முதலில் மனிதனை மனிதனாக மதிக்கப்பழகுங்கள். பஷீர் சேகுதாவூத் எம்பியை விமர்சிப்பதற்கும், கண்மூடித்தனமாக பட்டம் சூட்டி நகைப்பதற்கும் உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சிந்தித்துப் பார்த்தீர்களா முதலில்? நான் தேர்தலில் பஷீர் சேகுதாவூத் சேருக்கு வாக்களித்தவன் அல்லதான், என்றாலும் அவரை மதிக்கின்றவன். அவரது மாற்று அரசியல் கண்ணோட்டத்தை உள்வாங்குகின்றவன். நீங்கள் இப்படியெல்லாம் எழுதியிருந்தும் அவர் கண்ணியமான முறையில் பதிலளித்திருப்பதில் இருந்தே அவரது தகுதி எங்கோ உயரத்தில் இருப்பது புரிந்துகொள்ளமுடிகின்றது. அரசியல் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்கின்ற ஒரு அமைச்சராக (மேர்வின் சில்வா போல) அவர் இருப்பாராக இருந்தால், உங்கள் நிலை என்ன ஆகும்? ஆனால் அவர் அப்படிப்பட்டவரல்ல. ஒரே ஊரில் இருந்தும், அவரைப் பற்றி புரிந்துகொள்ளாதிருப்பது வேதனையளிக்கிறது. அது சரி, கழுதைகளுக்குத் தெரியுமா கற்பூர வாசணை?
தம்பி நீங்க எப்போ கழுதையப் பிடித்து கற்பூரத்த காட்டியிருக்குறீங்க அதுக்கு கற்பூர வாசனை தெரிவதற்கு. இஙக் பாருங்க ராசா அமைச்சர் ஒரு சிறந்த கலைஞர் அவர் கலைத்துறையை வளர்த்து இன்று ஏரூர் மண்ணில் இருந்து பல எழுத்தாளர்களும், கவிஞர்களும் பல இடங்களிலும் பிரகாசித்துக் கொண்டிருக்காங்க போல தான் தேர்ச்சி பெற்ற துறையினையே வளர்ப்பதற்கு நாதியற்ற இந்த அமைச்சர் எப்படி ஊரை வளப்படுத்துவது. நீங்கள் சொல்லலாம் அவர் அது செய்துள்ளார் இது செய்துள்ளார் என்று ஆனால் அவை எல்லாம் வெறும் கண் துடைப்புக்காக செய்யப்பட்டவைகளே. இவர் அரசியல் ஞானம் ஈரோஸ் இயக்கத்திடமிருந்தே பெற்றது. அந்த இயக்கத்திலே முதன் முதலாக பாராளுமன்ற உறுப்பினராக ஆனார். அதற்காக தமிழ் மக்களுடன் ஐக்கியமாக இருக்கிறார். சமயம் கிடைக்கும் போது பல சதித்திட்டங்களுக்கு அவரது தீவிரத இயக்க நண்பர்களை பல வேலைகளுக்காக பயன்படுத்தியும் இருக்கின்றார். பேசுகின்ற பேச்சினிலே பார்ப்பவனுக்கு தோன்றும் இவர் பெரிய செயல் வீரன் என்று. அனால் எல்லாம் வெறும் வேசம் மண்டையில் மசாளா இல்லாத மக்களை மடையனாக்குவதற்கு இவர் பல உபாயங்களை வைத்திருக்கின்றார். இவர் பள்ளியை கட்டி முடித்துவிட்டதாக அதனை வைத்து அரசியல் செய்த ஈனதனமான அரசியல் வாதிதான் இவர் இவர்ர அப்பன் வீட்டு சொத்திலிருந்தா கட்டினாரு வந்ததுல பாதியை பதுக்கிவிட்டு மீதியை வைத்து எதோ கண்துடைப்பிற்கு செய்து விட்டு வெட்கமில்லாமல் அதற்கு முன் நின்று போட்டோ எடுத்து போஸ்டர்களுக்கு போஸ் கொடுக்காரு. தலைவரையே கொலை செய்து விட்டு கையாலாகத தலைவனை முஸ்லிம்காங்கிரஸின் தலைவனை வைத்து விட்டு அவனுக்கு பெண்களை கூட்டிக் கொடுத்து விட்டு அவனையும் கட்டிப் போட்டிருக்கும் குள்ளநரிதான் இந்த அரசியல்வாதி. கலை ஞானி.மண்ணின் மைந்தன், மயிறு மட்டை எல்லம் இவர்தான்.
i can understand that Safeer talking about Basheer MP. Because once Basheer told that i always MP and i can be a Minister in any of the government.
it's true. he proofed that and he is a politician. every bodies can't accept him and there are may so many different opinion. it's practical.
But Safeer You are too much and not good for this kind of writing for your future. you are educated person. i admired your writing skill. but now i feel sad, it's showing your dirty mind.
see you soon.
Surenthiran,
Eastern University.
we are muslim. dont sheet ohers. if you sheet adults allah punish in this moment. this not good to hafees. so think your life.if you are good man.pls say to apologise to basheer sir. because basheer sir is a good and knowledgable man.
442. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
மார்க்கத்தைக் கற்ற, கலையிலும் இலக்கியத்திலும் நீண்ட தூரம் பயணித்த ஒரு படைப்பாளி இப்படியொரு எழுத்தை எழுதுவதை எந்த வகைக்குள் சேர்ப்பது? கலைஞர்களுக்கு, மார்க்கத்தில் தெளிந்தவர்களுக்கு இந்த மாதிரி வக்கிரப்புத்தி இருக்கவே கூடாது. பஷீர் தவறானவராயிருந்தால், அதற்கான கூலியை அல்லாஹ் அளிப்பான். இப்படி எழுதி அவரை அகௌரவப்படுத்த நீர் நினைத்தது இருக்கிறதே, இது அரசியல் செய்றகிறவர்களை விடவும் கேவலமாக இருக்கிறது.
எந்தத் துறையை அல்லது எந்த ஒரு மனிதரை விமர்சிப்பதற்கென்று நேரான, மிகவும் வெளிப்டையான, ஆதாரபூர்வமான, வழிமுறைகளையே பொறுப்பு வாய்ந்த நலன் விரும்பி கையாள்வார். நண்பர் பஷீர் அவர்கள் அண்மையில் எனதூரில் அரசியல் ரீதியான ஒரு முக்கியமான தருணத்தில் நியாயத்தின் பக்கமே விடாப் பிடியாக நின்றவர் என்பதை ஒரு சிலர் மாத்திரமே அறிந்திருப்பர். அவ்விளைவினால் ஊரும் மக்களும் இன்றியமையாத உதவியைப் பெற்றனர். இது போலவே ஒரு முஸ்லீமாக தன்னுடைய சமூகத்திற்கு அவசியமான பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறவர். தனிப்பட்ட ரீதியில் அறிவுபூர்வமான ஒரு ஆளுமை.பொறுப்பற்ற முறையிலும் சிறுபிள்ளைத்தனமாகவும் அவரை விமர்சித்திருப்பது வெட்கப்படத்தக்கதாகும்.அனார்
ஹாபிஸ் தம்பி என்ன இதெல்லாம். கையில கத்தி இருக்கிறதுக்காக அடுத்தவன் கழுத்தை அறுக்க நினைக்கிறதா? எழுதத்தெரிந்தா எல்லாம் எழுதுறதா? முதுகலை வரையிலும் பட்டம் பெற்றும் மனம் பக்குவப்படல்லியே. திரும்ப ஆரம்பிங்க அலிப் பேயில இருந்து....
ஸபீர் ஹபிஸ் உங்களிடமிருந்து இத்தகையதொரு எழுத்தினை எதிர்பார்க்கவில்லை.தயவு செய்து இந்த பதிவினை நீக்குங்கள்
பொத்துவில் அஸ்மின்
பசீர் பற்றி ஸபீர் எழுதியிருப்பது கொஞ்சம் ஓவர்தான். அதற்காக அவையெல்லாம் இல்லையென்று சொல்ல முடியாது. அமைச்சர் பசீர் கடந்த தேர்தலில் போட்டியிட்ட போது ஏறாவூரில் வெளியிடப்பட்ட சகோதரர் வாஜித் அவர்களின் குறிப்புகளை கொஞ்சம் படித்துப் பாருங்கள் சகோதரர்களே!
"நாங்கள் பேசுவதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை.
கடந்த 2004 ம் பொதுத் தேர்தலில் தான் தோல்வியுற்றால் நான் இனி ஒருபோதும் தேர்தலில் போட்டியிடமாட்டேன். உங்களிடம் வாக்குக் கேட்டு தேர்தல் மேடை ஏறி வரமாட்டேன். என்று சத்தியம் செய்து தேர்தல் பிரசாரம் செய்த நீங்கள் மீண்டும்ää "வல்லாஹி" என்ற வார்த்தைப் பிரயோகங்கள் கொண்ட ஒரு பிரசுரத்துடன் மீண்டும் ஒரு முறை மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை தங்களின் சுயநலத்துக்கு தாரை வார்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளீர்கள்.
தங்களின் அரசியல் வரலாற்றையும்ää மக்களை ஏமாற்றும் நுட்பங்களையும் நாங்கள் நன்கு அறிந்தவர்கள் என்ற வகையிலும் இவ்வாறான ஏமாற்று நடவடிக்கைகளை எமது சமூகத்தில் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என்ற வகையிலும் இது தொடர்பாக மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டியது எமது கடமையாகும்.
தனது இளம்பராயத்தில் மறைந்த அல்ஹாஜ் பதியுதீன் அவர்களின் ஆதரவாளராக இருந்த நீங்கள் கம்யூனிசääநாஸ்திக கொள்கைகளைக் கொண்ட ஈரோஸ் இயக்கத்தில் இணைந்து நேரடி அரசியலில் ஈடுபடத் துவங்கியுருந்தீர்கள். பின்னர் 1994 ம் ஆண்டே முஸ்லிம் காங்கிரஸ் இல் இணைந்து ஏறாவூர் முஸ்லிம் சமூகத்துக்குள் தன்னை இணைத்துக் கொண்டு அரசியலில் ஈடுபடத் துவங்கியிருந்தீர்கள். அன்றிலிருந்து இன்று வரை புலியை காட்டி மக்களை அச்சமூட்டுவதனூடகவும்ää தனது பதவியே ஏறாவூரின் தன்மானம் என்று கூறி அவர்களின் தன்மானää பிரதேசää இன உணர்ச்சிகளை தூண்டுவதனூடாகவுமே உங்களது அரசியலை செய்து வருகின்றீர்கள்.
இந்த பிரதேசத்துக்கு பல்வேறு நன்மைகள் செய்வதற்கு எண்ணம் கொண்டுள்ளதாக தேர்தல் மடல் மூலம் கூறிய நீங்கள் இதுகால வரை வகித்த பா.உää பிரதி அமைச்சர்ää அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் போன்ற பதவிகளை வைத்து உங்களது சொந்த முற்சியால் எமது ஊருக்கு எதை சாதித்துள்ளீர்கள் என்பதை தயவு செய்து உங்கள் மனச் சாட்சியை தொட்டு கூறுங்கள். பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி மூலமானää மு.கா. முடிவின் படியான தேசிய மீலாத் விழா மூலமான கட்டிடங்களையும்ää சில வீதிகளையும் தவிர.
1. எமது ஊர் பிரதேச செயலகம் மிக நீண்ட காலமாக சொந்தமாக ஒரு கட்டிடம் இல்லாமல் இயங்கி வந்ததை அனைவரும் அறிவார்கள். நீங்களும் அறிவீர்கள். ஊரின் நன்மை பற்றிப் பேசும் உங்களுக்கு எமது பிரதேச செயலகத்துக்கு ஒரு கட்டிடம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வராமல் போனது ஏன்?
2. உங்களுக்கு பெரும்பான்மையான வாக்குகளை அள்ளி வழங்கும் ஏறாவூர் பற்றிலுள்ள அந்த ஏழை மக்கள் இன்றுவரை செங்கலடி பிரதேச சபைக்கு சென்று பல சிரமங்களுக்கு மத்தியில் தங்களது தேவைகளை நிறைவு செய்கின்றார்கள். நீங்கள் மாகாண சபை உள்ளூராட்சி அமைச்சராக இருந்தபோது ஏறாவூர் பற்று முஸ்லிம் பிரிவை ஏறாவூர் நகரத்துடன் இணைத்து பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்துவதற்கு உங்களுக்கு சந்தர்ப்பம் இருந்ததல்லவா? அதை ஏன் செய்யவில்லை?
மேலே உள்ள இரு விடயங்கள் தொடர்பாகவும் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டபோது தங்களின் இயலாமையை மறைப்பதற்காக "இவ்வாறான வேலைகள் புலிகளையும் தமிழர்களையும் பகைக்கின்ற விடயம்" என்று புலிப் பூச்சாண்டியல்லவா காட்டினீர்கள்? இவ்விடயங்கள் எமதூர் நலன்விரும்பிகளால் ஏறாவூரில் பிறக்காதää ஏறாவூர் மக்களின் வாக்குகள் தனக்கு தேவைப்படாத அமைச்சர் அதாவுல்லாஹ்விடம் முன்வைக்கப்பட்டபோது எவ்வித தயக்கமும் இன்றி உடனடியாக நிறைவேற்றிக் கொடுத்தாரே .ஒரு அரசியல்வாதிக்கு இருக்க வேண்டிய அந்த ஆளுமையும்ääதைரியமும் உங்களுக்கு ஏன் இல்லை?
அத்தோடு அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தமும் அதன் பாதிப்புக்களும் அனைவரும் அறிந்ததே. நீங்கள் 2002 ம் ஆண்டு தேசிய வீடமைப்புää நிர்மாண பிரதியமைச்சராக இருந்த போது தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையும் உங்களது அமைச்சக்கு கீழிருந்ததே. நீங்கள் உங்கள் அமைச்சைப் பயன்படுத்தி எமது ஊருக்கு முறையான ஒரு வடிகாலமைப்பு திட்டத்தினை செயற்படுத்துவதற்கு சந்தர்ப்பம் இருந்ததல்லவா? அவ்வாறு நீங்கள் செய்திருந்தால் எமதூர் ஏழை மக்களுக்கு ஏற்பட்ட அனர்த்தத்தினை ஓரளவேனும் குறைத்திருக்கலாமல்லவா? ஏன் செய்யவில்லை?
ஏறாவூர் மக்களிடையே உள்ள இவ்வாறான கேள்விகளுக்கு விடையளிக்காமல் ஏறாவூருக்கு நன்மை செய்யவிருப்பதாக கதையளப்பது மக்களை ஏமாற்றும் செயல் அன்றி வேறில்லை.
இந்த இடத்தில் நீங்கள் 1994 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் இல் இணைந்து உங்களின் தேர்தல் சுவரொட்டியில் பயன்படுத்தியிருந்த பின்வரும் வாசகங்களை உங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகின்றோம். "எனக்குள் கனலுகின்ற விசயங்கள் இருக்கின்றன.நான் மகிழ்வுறுகையில் அவை தங்கமாக மிளிரும்". உங்களை இந்த ஏறாவூர் மக்கள் எத்தனை தடவைகள் தங்கள் வாக்குகளால் மகிழ்ச்சிப்படுத்தி விட்டார்கள்.இன்னும் நீங்கள் திருப்தி அடையவில்லையா? உங்களுக்குள் கனன்று கொண்டிருந்த "அந்த"விஷயங்கள் அணைந்து விட்டனவா?
உங்களுடைய திறந்த மடலில் வரிக்கு வரி ஏறாவூருக்கான நன்மை பற்றியும்ääமுஸ்லிம் காங்கிரஸ் இன் அரசியல் பலம் பற்றியும் கதைத்துள்ளீர்கள். எனவேääகடந்த காலங்களில் எமது ஊரின் மீது உங்களுக்கிருந்த அக்கறை பற்றியும்ääமுஸ்லிம் அரசியல் தொடர்பாக உங்களுக்கிருந்த பார்வை பற்றியும் இவ்விடத்தில் பேச வேண்டியது தவிர்க்க முடியாததாகிறது.
இதற்கு முட்டாள்களின் கதை எனப் பெயரிடலாம். ஒரு முட்டாளைப் பற்றி இன்னொரு முட்டாள் எழுதியுள்ள கதை என்பதனால்.
இது கதையல்ல, நிஜம்.
ஆனால், நீங்கள் எழுதியிருப்பதுதான் பொருந்தவில்லை ஸபீர்.
பஷீர் சேரை எழுத தகுதி வேண்டும் என்று சொல்வதெல்லாம் அவரின் கிளையில் தொங்கித்திரியும் குரங்குகளின் வேண்டுகோள். இங்கே வார்த்தைகளாக வந்துள்ளவை ஹாபிஸின் தனிப்பட்ட தொகுப்பள்ள..
சமூகத்தில் ஆங்காங்கே கிடந்தவைகளின் வரலாற்று தொகுப்பென்பதை புரிந்துகொள்ளுங்கள் சேர்...
கலைஞன் என்று அவர் அவரது பணியை சரயாகத்தான் செய்துள்ளார். அரசியல்வாதி,சமூகசேவகன் என அவர் அவரது பணியை சரியாகச் செய்தால் ஏன் இதெல்லாம்.?.....
உண்மையான விடயத்தைதான் எழுதி இருக்கிங்க.. ஆனால் இலக்கியவாதி என்று சொல்லி உண்மைய மறைக்க முடியாது................... இந்த பதிவு அத்தனையும் உண்மை.. தவிர இலக்கியவாதிகள்தான் வரலாற்றின் உண்மையை பதிவு செய்ய வேண்டும்..
இப்பதிவையை நீங்க வோண்டாம்
நான் பாடசாலை தமிழ் இலக்கிய புத்தகத்தில் யாரோ ஒரு இலக்கியலவாதி எழுதிய கட்டுரை எழுதுவதுக்கான மாதிரி வடிவில் ஒரு கட்டுரை அன்று எனக்கு பலபாதிப்புக்குள்ளை ஏற்படுத்தியது. அந்த கட்டுரையிர் ஊரையடித்து வயிருவளத்து பிறர் கோவில் கட்டிய உடன் அவன் நல்லவன் ஆன கதைதான். அது ...
எனக்கு தமிழ் இலக்கியம் பற்றி எதுவும் தெரியாது.. ஆனால் உங்கலுக்கு முழு உரிமை உள்ளது .. கருத்துகளை பதிய...........
வழமையானதுதான்............. ஏறாவூர் அல்லகை இலக்கிவாதி இருப்பதில்லை.. சபீர் .உங்களுக்கு தெரியும் நம் ஊரில் பலர் இந்த அல்லக்கை வேலை பாக்க விருப்பம் இல்லா காரணத்தால் தான் பல இலக்கிய படைப்புகள் இன்னும் கரையானுக்கு பலியாகிறது... நீங்களும் இதுக்கு பலியாக வேண்டாம்.. நீங்கள் இவர்களை விட்டுவிட்டு உங்கள் பயணத்தை .....................
ஊருக்குள் ஆயிரம் பேர் 2 ஆயிரம் கதைப்பான் அதனை எல்லாம் தலைக்கேற்றாது நாம் நமது சிந்தனை சொல் செயல்களை சரியாக எடுத்துச்சென்றால் படைத்தவன் யாவற்றையும் அறிந்தவன்.....
இங்குள்ள கருத்துக்களை கவனிக்கும்போது என்ன இருந்தாலும் சபீர்ஹாபிஸ் இப்படி எழுதியருக்கக்கூடாது என்று கூறியிருக்கின்றார்களே தவிர அமைச்சரின் சேவைகளைக்கூறி தவறை திருத்த முயற்சித்ததாகத்தெரியவில்லை.அதற்குள் ஏன் அவசரப்பட்டு...........
இறுக்கத்துல ரொம்பவே இறுக்கி விட்டுட்டிங்க ஹாபிஸ்...
ஆனாலும் இங்கு அரசியல் பேச வரும் பெரும்பாலான சகோதரர்கள் மாற்றுக்கருத்துக்களுக்கு உரிய மதிப்பினை கொடுக்கத் தெரியாதோராக இருப்பது வருத்தமாக இருக்கிறது...
ஜிப்ரி மாஸ்டர் மட்டுமல்ல.. வேறெந்த ஏறாவூர் மாஸ்டரும் ஊரைப்பற்றி நினைப்பது குறைந்து செல்வது பிரதான பண்பாக மாறிவிட்டது போல் எனக்குத் தோன்றுகிறது...
தேர்தல் நெருங்கும் போதாவது ஊர் மக்கள் நினைவுக்கு வருவார்கள்தானே மாண்புமிகு எம்பிகளே! தம்பிகளே!!
கருத்துரையிட்ட ரியோ ஸ்டூடியோ மற்றும் முஸ்அப் ரஸ்மி ஆகியோருக்கு நன்றிகள்.
Post a Comment