Wednesday, May 16, 2012

இஸ்லாத்தின் எதிரிகள் யார்?


இஸ்லாத்தை எப்போதும் தீவிரவாத சமயமொன்றாகக் காண்பிக்கும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரல், இடைவிடாது தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்தான், அண்மையில் பெண்டகனின் வகுப்பொன்றும் இடம்பெற்றுள்ள‍து. இஸ்லாத்தை உலகிலிருந்து முற்றாக ஒழித்து, முஸ்லிம்களின் அடையாளச் சின்ன‍ங்களான புனித மக்கா, மதீனா பிரதேசங்களை அணுகுண்டு போட்டேனும் தகர்க்க‍ வேண்டுமென அதன் அதிகாரிகள் கீழ்மட்ட‍ அதிகாரிகளுக்கு பாடமெடுத்துள்ள‍னர்.

இருந்தாலும், அமெரிக்காவின் மிஞ்சும் கழிவுப் பொருட்களில் சுகபோகம் அனுபவித்து வரும் அரபுலகமும் அரபு ஷேக்குகளும் அமெரிக்கா தொடர்பான தமது நிலைப்பாட்டையும் கருத்தையும் இதன் பிறகேனும் மாற்றிக் கொள்வார்கள் என ஒரு போதும் நாம் எண்ணி விட முடியாது.

அமெரிக்காவை எதிர்க்கின்ற, அல்ல‍து சுயமாக கண்டுபிடிப்புகளையும் அபிவிருத்திப் பணிகளையும் புரிகின்ற நாடுகளை விட, அமெரிக்காவுடன் நல்லுறவு பேணி, அமெரிக்காவின் எச்ச‍ சொச்ச‍ங்களில் சுகபோகத்தையும் ஆடம்பரத்தையும் அனுபவித்து வரும் நாடுகள்தான் உண்மையான இஸ்லாமிய நாடுகள் என்று பிரசாரம் செய்யும் படியாக, தமது தாயீக்க‍ ளை சம்பளத்திற்கு அமர்த்தியிருக்கின்றன‌ அரபு நாடுகள். இவர்களைக் கொண்டு உலகில் தமது செல்வாக்கை எப்போதும் தக்க‍ வைத்துக் கொள்வதிலும், தமது வளத்தைப் பெருக்கிக் கொள்வதிலும் அவ்வ‍ரபு நாடுகள் மிகக் குறியாகவே இருந்து வருகின்றன.

மேற்குலகின் நிகழ்ச்சி நிரலை மத்திய கிழக்கில் அமுல்படுத்துவதற்காக ஐரோப்பிய சக்திகளால் திட்ட‍மிட்டு உருவாக்க‍ப்ப‍ட்ட அல்கைதா உள்ளிட்ட‍ அமைப்புகளும் அவைப் பின்பற்றும் வஹ்ஹாபிய சிந்தனைகளும் அரபு நாடுகளின் ஆடம்பரத் தலைவர்களையும், ஐரோப்பிய அமெரிக்கா சார்பு சிந்தனைகளையும் பாதுகாப்ப‍திலும், அமெரிக்காவை எதிர்க்கும் இஸ்லாமிய நாடுகளைக் குறிவைத்து எதிர்ப்புப் பிரசாரத்தையும் தாக்குதல்களையும் நடத்துவதிலும் தமக்கு வழங்கப்ப‍டும் சம்பளத்திற்கேற்ப அர்ப்ப‍ணிப்புடன் செயலாற்றி வருகின்றன. 

இஸ்லாத்தின் பெயரால் இயங்கி வரும் இத்த‍ கைய அமைப்புகளும், அவற்றின் பொருளாதார வலிமையும் தகர்க்க‍ப்ப‍டும் வரை, உலகில் இஸ்லாத்திற்கு உள்ள‍ அச்சுறுத்த‍ லை அகற்றி விட முடியாது. 

1 comment:

முகம்மது கான் said...

உண்மைதான் நீங்கள் சொல்வது. உலகில் இடம்பெறும் பெரும்பாலான பிரச்சினைகளின் பின்னால், ஏகாதிபத்தியவாதிகள் தங்களது நலனைப் பேணுவதற்கான நிகழ்ச்சி நிரலை அமல்படுத்திக் கொண்டிருக்கும் நிலையுள்ளது. இதற்கு பெரும்பாலான அரபு நாடுகள், குறிப்பாக சவூதி அரேபியா பக்க பலமாக இருந்து வருகின்றது. அங்குள்ள மன்னர்களின் ஒரே இலக்கு, தங்களது ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்காக எதனையும் விட்டுக் கொடுக்க அவர்கள் முன்வருவார்கள்.

Twitter Bird Gadget