Thursday, October 1, 2009

கிழக்கிலங்கை முஸ்லிம்களின் காணிகள் அபகரிப்பு


பூதாகரமாக உருவெடுத்திருக்கும் கிழக்குமாகாண முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைக்கு கிழக்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள், முஸ்லிம் அமைச்சர்கள், மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் எவ்வாறு கிழக்கு முஸ்லிம்களுக்குத் தீர்வை பெற்றுக் கொடுக்கப்போகிறார்கள். என்பதை கிழக்கு முஸ்லிம் சமூகம் அச்சமடைந்த நிலையில் மிக உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது.

மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியுள்ள கிழக்கு மாகாணத்தில் 40.5 சதவீத முஸ்லிம் சனத் தொகைகமைய ஏறத்தாழ 3500 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பிற்கு உரித்துடையவராக இருக்கும் நிலையில் கிழக்கு முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள், உடமைகள், இருப்புகள் பறிக்கப்படுகின்றன. சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன, கப்பம் பெறப்படுகின்றன, உயிர்க் கொலைகள் கூடத் தொடர்கின்றன. இதன் காரணமாக கிழக்கு முஸ்லிம்கள் கவனிப்பாரற்ற அனாதைகளாகும் நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது.

ஆனால் அரசியல் தலைவர்கள் பேரினவாத நிகழ்ச்சி நிரலை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டதன் காரணமாக மௌனியாகி விட்டனர். தத்தமது பதவிகளைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமெனில் பேரினவாத இனச் சுத்திகரிப்பு, நில அபகரிப்பு நிகழ்ச்சி நிரலுக்கு அடிபணிந்துதான் நடக்க வேண்டும். இல்லையாயின் பதவிகள் பறி போகலாம், செல்வாக்கு இழக்கப்படலாம் அதற்காக முஸ்லிம்களின் நிலம் தொடர்பான உரிமைப் பிரச்சினைகளை கண்டும் காணாதவர்களாக நடந்து கொள்கின்றனர்.

இவர்கள் இப்படிப்பராமுகமாக இருப்பது தமது சுய நலத்திற்காகவே. இவர்கள் உண்மையில் முஸ்லிம் சமூகத்தின் பிரதி நிதிகளாக இருப்பின் இப்படியான அப்பட்டமான உண்மைகளை தாம் அங்கம் வகிக்கும் அரசுக்குத் தெளிவுபடுத்தி தீர்வைக்காண முயற்சிப்பதே சமூகத்தின் உண்மையான பிரதிநிதியாக முடியும் இவ்விடயம் இவ் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்களுக் கூட இப்படியானதொரு பிரச்சிணை கிழக்கு முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கிறதா? என்ற சிந்திக்காத அரசியல் தலைவர்களும் நம்மத்தியில் இருக்கத்தான் செய்கின்றனர்.

இந்த துர்ப்பாக்கிய நிலையில் இருந்து கிழக்கு முஸ்லிம் சமூகத்தின் வாழ்வாதாரப் பிரச்சிணையை அடுத்த தலைமுறைக்கு செல்ல விடாது தீர்த்து வைப்பதற்கு காத்ரமான நடவடிக்கையை மேற்கொள்வது கிழக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல புத்திஜீவிகளினதும் பொறுப்புமாகும். இந்நிலையில் கிழக்கு முஸ்லிம் சமூகத்தினருக்குச் சொந்தமான, உரித்துடைய காணிகள், எங்கே எவ்வளவு அபகரிக்கப்பட்டுள்ளது, அல்லது சுவிகரிக்கப்பட்டுள்ளது என்பதை முதலில் அறிந்து கொள்வதும், எப்படியான உரித்து முறைகளில் அவைகள் சொந்தமாகின, அவற்றைப் பெற்றுக்கொள்ள எப்படியான வழிமுறைகளைக் கையாளலாம் என்பதும் மிகமிக முக்கியமான விடயமாகும்.

இவ்விடயத்தை பல அமைப்புகள் சிந்தித்த போதும் தெளிவான ஆதாரத்துடன் ஆய்வு செய்ய முன்வராததும் முஸ்லிம் சமூகத்தில் உள்ள தலைவர்கள் பத்திஜீவிகளின் குறைபாடாகும். என்றாலும் கிழக்கிலங்கை முஸ்லிம் சமாதானப் பேரவை என்ற எமது அமைப்பு மிகமிக சிரமத்திற்கு மத்தியில் இவ் ஆய்வினை மேற்கொண்டதன் பலனாக பல உண்மைகள் வெளிவந்தன.

முழுக்கிழக்கிலும் இன்றுவரை 14870 முஸ்லிம் குடும்பங்களுக்குச் சொந்தமான 62108 ஏக்கர் நிலப்பரப்புவுள்ள காணி பேரினவாதிகளாலும,; தழிழ் ஆயுதக் குழுக்கலாலும், அபகரிப்புக்கும் சுவீகரிப்புக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளன. இவற்றில் அம்பாறை மாவட்டத்தில் 4211 முஸ்லிம் குடும்பங்களுக்குச் சொந்தமான 16718 ஏக்கர் நிலப்பரப்பும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 5473 முஸ்லிம் குடும்பங்களுக்கச் சொந்தமான 28297 ஏக்கர் நிலப்பரப்பும் திருமலை மாவட்டத்தில் 5186 முஸ்லிம் குடும்பங்களுக்கச் சொந்தமான 17092 ஏக்கர் காணியும் கடந்த 20 வருடங்களாக சுவீகரிக்கப்பட்ட அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களாகும். இக் காணிகளில் 80 சதவீனமானவை முஸ்லிம்களின் பூர்வீக உரிமையுள்ள சொந்தக் காணிகளாகும்.

அம்பாறை மாவட்டத்தில் பாணமைப்பற்து னுசுழு பிரிவில் பொத்துவில் பிரதேசத்தை உள்ளடக்கிருந்த காலத்தில் 472 சதுர மைல் நிலம் இப்பிரிவிற்கு மொத்தப் பரப்பளவாகும். இப்பிரிவில் 74 சதவீதம் முஸ்லிம்களும் 24 சதவீதம் சிங்கள சமூகத் தலைவர்களும் இருந்தனர் ஆனால் இப்பிரதேசத்தை பொத்துவில் - லஹூகல ஆகிய இரு பிரதேச சபைகளாகப் பிரிக்கப்பட்டன. அப்போது 74 சதவீதமான முஸ்லிம்களுக்கு 103.9 சதுர மைல் நிலப்பரப்பும், 26 சதவீத சிங்கள மக்களுக்கு 386.1 சதுர மைல் பரப்பளவை உள்ளடக்கிய நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டது இது தவிரவும்.

1983 ஆண்டு ஒக்டோபர் மாதம் 07ந் திகதி வெளியான பாராளுமன்ற ஹென்சாட் தொகுதி 25 இலக்கம் 10ல் பிரசுரமான படத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களில் 43 இடங்களில் பௌத்த சிதைவுச் சின்னங்களை ஆய்வு செய்து ஆதாரப்படுத்தியுள்ளதாக ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. என ஹென்டாடில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 1968ம் ஆண்டு 585 ஏக்கர் நிலப்பரப்பு திகவாபி பௌத்த விகாரைக்குரியது என சவீகரிக்கப்பட்டுள்ளது. பின்னர் இக்காணிகள் சிங்களவர்களுக்கு கரும்புச் செய்கைக்காக வழங்கப்பட்டுள்ளன. அதற்குப் பின்னரும் மீண்டும் 100 வருடங்கள் பழைமை வாய்ந்த உறுதிக் காணிகள் 275 ஏக்கர் திகவாபி விகாரை அபிவிருத்திக்கென சுவீகரிக்கப்பட்டுள்ளன.

இதன் பின்னரும் அரச அனுமதிப்பத்திரம் பெற்ற 50 வருட காலத்திற்கு மேல் முஸ்லிம்கள் விவசாய நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த 997 ஏக்கர் காணி பௌத்த சமூக குடியேற்றத்திற்காக மீண்டும் சவீகரிக்கப்பட்டது. இப்படி தொடர்ந்து முஸ்லிம்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டே வந்துள்ளன. அம்பாறை மாவட்டம் 1775 சதுர மைல்களை உள்ளடக்கிய பிரதேசமாகும் 1921ம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் படி முழுக்கிழக்கிழங்கையிலும் 4 சதவீத பௌத்த சிங்களவர்களே வாழ்ந்துள்ளனர். மாறிமாறி வரும் பெரும்பான்மை அரசின் திட்டமிட்ட குடியேற்றங்கள் காரணமாக குறிப்பாக கல்லோயா குடியேற்றத்திட்டம் காரணமாக 1340 சதுர மைல் நிலம் சிங்கள சமூகத்தின் உடமையாக்கப்பட்டுள்ளது. 1921ம் ஆண்டு குடிசன கணிப்பின் படி அம்பாறை மாவட்டத்தில் 100 சதுர மைல் நிலப்பரப்பே அவர்களின் உரிமையானதுமாகும். அதேவேளை அம்பாறை மாவட்டத்தில் 41.6 சதவீதமான முஸ்லிம்கள் இருந்தம் தற்போது 263 சதுர மைல் நிலமே அவர்களின் உரிமையாக உள்ளது. ஆனால் உண்மையில் விகிதாசாரப்படி சேரவேண்டிய நிலம் 726 சதுர மைல்களாகும்.

இப்போது அம்பாறை மாவட்டத்தில் பொதுத் தேவைக்கு முஸ்லிம்கள் நிலத்தைப் பெற்றுக்கொள்வது மிக சிரமமான காரியமாகும். இந்த நிலையில் சுனாமி அனர்த்தத்த்pனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் போராட்டத்திற்கு மத்தியில் அரசாங்க அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சரான ஜனாபா பேரியல் அஸ்ரப் அவர்களின் விடாமுயற்சியின் காரணமாக கட்டப்பட்டுள்ள 500 வீடுகளைக் கூட முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திகவாபி புன்னிய பூமிக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக நீதிமண்றம் சென்றுள்ளனர். என்பது கூட மனித உரிமை மீறலின் அதி உச்சக்கட்டமாகும். இப்படியே அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் நிலம் சம்மந்தமான பிரச்சிணை தொடர் கதையாகியுள்ளது.

இதே அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களும் மிகப்பெறும் பொறிக்குள் மாட்டப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம் 2633.1 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட பிரதேசமாகும். இம்மாவட்டத்தில் 26 சதவீத முஸ்லிம்கள் நிரந்தரமாகவே வாழ்கின்றனர் இதன்படி இம்மாவட்டத்தின் சனவிகிதாசாரப்படி 685 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புக்கு முஸ்லிம்கள் உரித்துடையவர்கள். ஆனால் காத்தான்குடி 3.74 சதுர கிலோமீட்டரும் ஏறாவூர் பட்டினம் 6.89 சதுர கிலோமீட்டரும் 2000 ஆண்டுக்கு முன் 176 சதுர கிலோமீட்டராக இருந்த கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பரப்பளவு தற்போது ஏறத்தாழ 7 சதுர கிலோமீட்டர் பரப்பளவும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு 26.12.2000 அமைச்சரவை அங்கிகாரப் பிரகாரம் 240 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தும், தற்போது 6-7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு நிலமே இப்பிரதேச செயலகத்தின் நிருவாகத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆக மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது முஸ்லிம்களின் நிலப்பரப்பு வெறும் 22 சதுர கிலோமீட்டர் பரப்பளவாகும். இதன்படி 26 சதவீதமாக உள்ள முஸ்லிம்களுக்கு 1 சதவீதக் காணி கூட இல்லாத பயங்கர நில வறுமை உருவாகியுள்ளது. 1990 ஆண்டு இனவன்முறையின் போது ஆயுதக்குழுக்களின் அடாவடித்தனம், அடக்கு முறையின் காரணமாக 37 முஸ்லிம் பூர்வீக கிராமங்களைவ விட்டு தமது உயிர் பாதுகாப்பிற்காக உடமைகளையும் இழந்த நிலையில் இரவோடிரவாக இப்பிரதேச முஸ்லிம்கள் வெளியேறினர்.

இதன் பின் கல்குடாத் தொகுதியின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குரிய காரமுனை 211 2ஃபு என்ற கிராம சேவையாளர் பிரிவும் புனானை கிழக்கு 211டீ என்ற கிராம சேவை பிரிவும் முற்றுமுழுதாக டுவுவுநு இனரின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக மாற்றப்பட்டது. கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு 11 கிராம சேவையாளர் பிரிவுகளை அமைச்சரவை அங்கீகரித்தும், அப்போதைய உள்நாட்டலுவல்கள் அமைச்சு 11 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேசத்தை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு நிருவாகம் செய்ய வழங்கும் படி அறிவுறுத்தியும், மட்டக்களப்பு அரச நிருவாகம் ஒன்பது கிராம சேவையாளர் பிரிவகளையே நிருவாகக் கட்டமைப்புக்கு வழங்கி இருக்கின்றது. அப்போது இது சம்மந்தமாக இப்பிரதேச நிறுவனங்கள் மாவட்ட உயர் அதிகாரிகளிடம் வினவப்பட்ட போது அவர்கள் ஆயுத போராட்டக் குழுவின் மீது பழியைப் போட்டனா.; அப்போதைய காலகட்டத்தில் அது ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே இருந்தது.

இதே நிலையே கோறளைப் பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலகத்திற்கும் ஏற்பட்டது. 1997ம் ஆண்டு வர்த்த மானி அறிவித்தலின் மூலம் இப்பிரதேச செயலக எல்லை உறுதிப்படுத்தப்பட்டிருந்த போதும் 2000மாம் ஆண்டு இச்செயலகத்தின் நிருவாகக் கட்டமைப்பில் இருந்த 5 கிராம சேவையாளர் பிரிவுகள் எந்த ஒரு அங்கிகாரமும் பெறாத நிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட கோறளைப் பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலகத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளது. இதே செயலகத்தின் மாஞ்சோலை கிராமத்தின் பெரும் பகுதி நிலம் இன்று கேள்விக்குறியாகிவிட்டது. இப்பிரதேச முஸ்லிம்களின் பூர்வீகமாக சுமார் 125 ஆண்டுகளுக்கு மேற்பட்ட உறுதிகள் இருந்தம் இப்போதும் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இச்செயல் காரணமாக கோறளைப் பற்று மேற்கு, கோறளைப் பற்று மத்தி ஆகிய இரு பிரதேச செயலகத்திற்கு 416 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு உரிமையாக இருக்கின்றது;. ஆனால் தற்போது இவ்விரு பிரதேச செயலகங்களுக்குரிய நிலப்பரப்பு வெறும் 13.5 சதுர கிலோமீட்டருக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரதேசத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள் சுமார் 500 மில்லியன் ரூபாவுக்கு மேல் பொருளாதார வளங்களையும் இழந்துள்ளனர்.

இதே போல் ஏறாவூர், செங்கலடி – பதுளை யு5 வீதியை அண்மித்த காணிகள் மற்றும் ஐயங்கேணி, மீராகேணி, மிக்நகர், ஹிதாயத்நகர், தக்வாநகர் ஆகிய கிராமங்களும் காத்தான்குடியின் எல்லைக் கிராமங்களான ஒல்லிக்குளம், கீச்சான்பள்ளம், கர்பலாநகர், பாலமுனை, காங்கையன்ஓடை ஆகியவைகள் இன்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டே இருக்கின்றன. இப்படியாக மட்டு மாவட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்த 28297 ஏக்கர் பரப்பளவு நிலம் முஸ்லிம்களின் உரிமைக் காணிகளாகும்.

ஆனால் கிழக்கில் அரசாங்கத்தின் நிலமீட்பு இராணுவ நடவடிக்கை காரணமாக குறிப்பிட்;ட 28297 நிலமும் இம்மாவட்டத்தில் மீட்கப்பட்டுள்ளன. ஆனால் இக்காணிகள் இதுவரை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்படவே இல்லை இது சம்மந்தமான முயற்சிகள் எந்த ஒரு அரசியல் தலைவர்களாலும் மேற்கொள்ளப்படவுமில்லை. பிரச்சினைக்குரிய கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி ஆகிய இரு பிரதேச செயலகங்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகள் இன்றுவரை எந்த ஒரு தீர்வு இல்லாமலே காலம் கடத்தப்படுகின்றன.

இதே நிலையே திருமலை மாவட்டத்திலும் உள்ளன. 11 பிரதேச செயலாளர் பிரிவில் 86000 சனத்தொகையை கொண்ட சிங்களவர்களுக்கு 5 செயலகமும், 96000 சனத்தொகையை கொண்ட தமிழ் சமூகத்திற்கு 2 செயலகமும், 152000 முஸ்லிம் சனத்தொகையை உள்ளடக்கிய சமூகத்திற்கு 4 செயலகங்களுமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. திருமலை மாவட்டத்தில் 2007ம் ஆண்டு திருமலை கச்சேரி புள்ளி விபரப்படி 45 சதவீத முஸ்லிம்கள் 28 சதவீத தமிழர்கள் 26 சதவீத சிங்களவர்கள் வாழ்கின்றனர். இப்படியான நிலையில் மாவட்டத்திலுள்ள நிலப்பரப்பில் 2ஃ3 பங்கு அதாவது 1850 சதுர கிலோமீட்டர் காணி பெரும்பாண்மை இனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளை திருமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் வாழும் கின்னியா பிரதேச செயலாளர் பிரிவிற்கு 152.6 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் சிங்களவர்கள் அதிகமாக வாழும் சேருவில, கந்தளாய், கோமரசங்கடவல பிரதேச செயலகங்களுக்கு முறையே 350.8, 477.02, 547.3 சதுர கிலோமீட்டர் பரப்பளவு ஒதுக்கப்பட்டுள்ளன. அதே நிலையில் 28 சதவீதமாக உள்ள தமிழர்களுக்கும் ஈச்சிலம் பற்று 98 சதுர கிலோமீட்டர் பரப்பும் திருமலை பட்டினம் பிரதேச செயலகத்திற்கு 132.3 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதை அடிப்பபடையாகக் கொண்டு பார்க்குமிடத்து திருமலை அம்பாறை மாவட்டங்கள் தனி சிங்கள மயமாக்கப்படுவதையும் திட்டமிட்ட குடியேற்றத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதையும் கவனிக்க முடியும். 1952ல் கந்தளாய் குடியேற்றத்திட்டம் ஆரம்பமான போது அப்பிரதேசத்திலுள்ள அரச நிருவாகம் 50 சதவீதமான காணிகளை உள்ளுர் மக்களுக்கே வழங்குவது என அறிவிக்கப்பட்டது. ஆனால் 30 வருடங்களுக்கு மேல் அப்பிரதேசத்தில் விவசாயம் செய்து வந்த முஸ்லிம்களை எவ்வித அறிவித்தலுமின்றி வெளியேற்றிவிட்டு 1954 ஆண்டு வெளிமாவட்டங்களில் இருந்து சிங்கள மக்களை அழைத்து வந்து இப்பிரதேசங்களில் குடியமர்த்தினர். அதேபோல் 1958 கந்தளாய் சீனித்தொழிற்சாலை உருவாக்கியதன் காரணமாக மெலும் 5000 ஏக்கர் முஸ்லிம்களின் காணிகள் பறிக்கப்பட்டு பெரும்பாண்மை இனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.

இப்படியாக் காணிகளை இழந்த திருமலை முஸ்லிம்கள் மாற்றுத் தொழில் தெரியாத காரணத்தால் கிண்ணியா பிரதேசத்தின் அருகிலுள்ள வான்ஆறு, கண்டிஆறு, மணியரசங்குளம், சாவாறு, கல்அரிப்பு, வாளமடு, வண்ணாத்திப்பாலம், கர்குழி, நடுஊத்து, கருஞ்சிப்பொத்தானை ஆகிய பிரதேச காடுகளை வெட்டி காணியாக்கினர். இந்தக் காணிகளும் 1967 கோமரசங்கடவில குடியேற்றத் திட்டத்தை உருவாக்கி இப்பிரதேசங்களில் விவசாயம் செய்து வந்த முஸ்லிம்களை வெளியேற்றி விட்டு இதன் காரணமாக அங்கு சிங்கள – முஸ்லிம் கலவரம் கூட ஏற்பட்டது. இதுதவிர கிண்ணியா பிரதேச கிராமங்களுக்குட்பட்டிருந்த பல ஏக்கர் பரப்பளவுக் காணிகள் புகையிலைக் கூட்டுத் தாபணத்திற்கு ஒதிக்கீடு செய்யப்பட்டு அக்காணிகளுக்குப் பேமிட் கொடுத்து சிங்கள மக்களை குடியமர்த்தினர். அதேவேளை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருந்த பேமிட்கள் ரத்து செய்யப்பட்டன. இப்படி சுமார் 10000 ஏக்கர் நிலம் முஸ்லிம் சமூகம் இழந்தது. இப்படியாக முழுக்கிழக்கிலங்கையிலும் 62108 ஏக்கர் காணிகளை அரசாங்கமும் ஆயுதக் குழுக்கழும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அபகரிப்பு செய்துள்ளனர்.

இதுதவிரவும் குச்சவெளி, பல்மோட்டை, மூதூர் பிரதேசங்களிலும் மேலும் திட்டமிட்ட சிங்கள சமூகத்தவர்களைக் குடியேற்றினர். இக்காணிகளில் ஒரு வீதம் கூட முஸ்லிம்களுக்கு வழங்கப்படவில்லை. காணி அபகரிப்பு நடவடிக்கை தொடர வாய்ப்புகள் உள்ளன.

இதேபோல் மட்டக்களப்பு மாவட்ட வாகரைப் பிரதேசத்தில் உள்ள பண்டித்தீவு என்றும் கிராமத்திலுள்ளதும் ஏறாவூர் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமானதுமான 12 ஏக்கர் தென்னந்தோட்டம் ஒரு பெரும்பான்மை இனத்தவர் விலைக் கிரயமாக வாங்கியுள்ளார். ஆனால் வாகரைப் பிரதேசம் முற்றிலும் தமிழ் பிரதேசமாகும். இப்படியே நில அபகரிப்பு தொடருமானால் கிழக்கு முஸ்லிம்களின் இருப்பே சந்தேகத்திற்கிடமாக மாறக்கூடிய சாத்தியங்கள் தெரிகின்றன. இது சம்மந்தமான மேலும் பல தகவல்களை எமது பேரவையின் செயலாளர் நாயகமும் சமூக ஆய்வாளருமான ஜனாப் எம்.ஜ.எம்.முகைதீன் அவர்களால் எழுதப்பட்டு முஸ்லிம் உரிமை மன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ள 'கிழக்கிழங்கை முஸ்லிம் அரசியல் இனமுறண்பாடு புரக்கனிப்பு' என்ற புத்தகத்தின் மூலம் அறிந்து கொள்ள வாய்புள்ளது.

இப்படியான மிக மோசமான நடவடிக்கைகள் மூலம் கிழக்கு முஸ்லிம் சமூகம் இருப்புக்கு ஆதாரமாக உள்ள நிலத்தை தொடர்ந்து இழந்து கொண்டே செல்லுமானால் அந்நிலங்களில் பெரும் பான்மை சமூகம் குடியமர்த்தப்படுமானால் எதிர் காலத்தில் எமது அரசியல் பிரதிநிதித்துவம் கூட இழக்கப்படலாம்.

July 2008

2 comments:

ASHROFF SHIHABDEEN said...

பறிபோகும் முஸ்லிம்களின் காணிகள் பற்றிய கட்டுரை பெறுமதியானது. மிகவும் தெளிவாகவும் சுருக்கமாகவும் ஒரே பார்வையில் தந்துள்ளீர்கள்.

இதற்கு வெறுமனே அரசியல்வாதிகளை மட்டும் குற்றம் சாட்டுவது ஒரு சாதாரணின் பார்வையாகும். மக்கள் தாம் எத்தகைய அச்சுறுத்தலுக்குள் வாழ்கிறோம் என்று உணரவில்லை. அவர்கள் இலகுவில் உணரவும் மாட்டார்கள். எடுத்துச் சொல்லிய அரசியல்வாதிகளும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்த வரை தமிழ் மக்களை விட மோசமான முறையில் பாதிக்கப்பட்டால் மாத்திரமே ஓரளவு இவர்கள் சிந்திக்கத் தலைப்படுவார்கள். அதற்குள்ளும் யாருக்காவது லஞ்சம் கொடுத்து தங்களது காரியத்தை முடித்துக் கொள்ள முடியுமானால் அதையே செய்வார்கள்.

இது ஒரு சோத்துச் சமூகம் என்று ஒரு முறை எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் குறிப்பிட்ட போது பலர் வெகுண்டெழுந்ததுண்டு. அப்படி வெகுண்டெழுந்தவர்கள் கிழித்தது எதுவும் இல்லை. நான் மீண்டும் மீண்டும் அவரது கருத்தையே முன் மொழிகிறேன்.

ashroff shihabdeen

Anonymous said...

இந்தக் கட்டுரைக்கு நன்றி. பொருத்தமானதும் மிகுந்த கவனத்தைக் கோருவதுமான ஒரு கட்டுரை.நீங்கள் குறிப்பிடும் கிழக்கிலங்கை சமாதானப் பேரவையின் மூல அறிக்கையினை அனுப்பி உதவ முடியுமா?
சேரன்
cheran@uwindsor.ca

Twitter Bird Gadget