
இளந்தென்றல்
எழுந்து வீசுகிறது
சுகமான நறுமணம்
நாசிக்குள் நிறைகிறது
சிவப்பாய்,
பச்சையாய்,
மஞ்சளாய்,
மலர்ந்திருக்கும் பூக்களில்
அழகு கசிகிறது
நீரோடைகளின் சலசலப்பும்
நீந்திச் செல்லும் மீன்களின்
மினுமினுப்பும்
உணர்வுகளில்
குளிர் தடவுகிறது
அடர் இலைகளிடை
உட்கசிகிறது
பார்வைக்குச் சுவையுணர்த்தும்
இயற்கையெழில்
தேனுதிர்க்கும்
குயில்ப் பாடல்களும்
பசுமை குமையும்
செழிய மரங்களும்
பசுந்தரையெங்கும்
ஒளிப்பருக்கைகளுமாய்
சிரித்துக் கிடக்கிறது
சோலை
ஆனாலும் -
நீ சிரிக்காத
நீ பேசாத
நீ பார்க்காத
நீ ஸ்பரிசிக்காத
என் தனிமைத் தகிப்பை
இவற்றால்
அணைக்க முடியவில்லையே
தோழி!
November 2006

No comments:
Post a Comment