நீ ஆச்சரியமானவள்
என் கண்களுக்குப் புலப்படாத
உணர்வுகளுக்குள்ளும்
இதுவரை நான் பார்த்தறியா
என் இதயத்தினுள்ளும்
புகுந்து விளையாடும்
ஆச்சரியமானவள் நீ
என் செறிந்த கவலைகளையும்
மிகச் சிறிய நினைவினால்
துடைத்தெறியும்
ஆச்சரியமான பலம்
உன்னில் மட்டுமேயுண்டு
என் மனதின் கலவைக்குள்
அநாயாசமாகத் தனித்து நின்று
உதிர்க்கும் புன்னகையில்
ஆச்சரியமானவள் நீ
என்னை சிரிக்க வைப்பதில்,
உறங்க வைப்பதில்,
விழிக்க வைப்பதில்,
இயங்க வைப்பதிலெல்லாம்
நீ கொண்டிருக்கும் பலம்
ஆச்சரியமானது
இன்னும் -
என் ஒவ்வொரு மூச்சின்
இறுதியிலும்
உயிர்த்து நிற்கும்
நிம்மதியைப் பலப்படுத்துவதிலும்
நீ ஆச்சரியமானவள்தான் கண்மணி!
March 2006
No comments:
Post a Comment