அனுமதி கிடைத்தாயிற்று
நான்கு வருட
உழைப்பினூடாகப் பாய்ந்து வரும்
வெற்றியலை இது
உள்ளச் சிறையிலிருந்த
ஓராயிரம் கனவுகளுக்கு
நிஜதரிசனம் தருவதற்கான
உரிமம் இது
சூரியன் முறுகி உறுமும்
நண்பகற் பொழுதொன்றில்
அதனை நானடைந்தேன்
அன்று –
கருக்கொண்ட முகிலொன்று
என் தலைமேற் கவிழ்ந்திற்று
ஊமை விலங்கொடித்து
என் உள்மனம் பாடிற்று
பஞ்சுப் பொதி போலொரு
பசுந்தளிர்க் கரம்
என் முரட்டுக் கரங்களிடை
முறுவலித்துச் சயனித்த
அந்த அந்திப் பொழுதில்
என் ஆன்மா அலறிற்று
இனி –
இறந்தாலும் கவலையில்லை!
March 2006
No comments:
Post a Comment