என்னுடைய
உடற்தோலை சுவராகவும்
உணர்வுகளை தரையாகவும்
உள்ளத்தை அந்தப்புரமாகவும் கொண்டு
மாளிகையொன்றை அமைத்தேன்.
உன்னை அதில்
குடியேறி வாழ அனுமதித்தேன்.
கோலாகலமாக
நீ வந்து அதில்
குடியேறினாய்
உன் அழகின் ஜொலிப்பும்
செயலின் வனப்பும்
என் மாளிகையில்
ஒரு புதிய கலகலப்பையே
உருவாக்கி விட்டது.
மாளிகையை நீ
புனருத்தாரணம் செய்தாய்
சுவர்களிலெல்லாம்
உன் பேரை மாத்திரம்
பெரிதாக எழுதினாய்
நான் ரசித்தேன்
தரைகளெங்கும்
உன் நினைவுகளையே
ஊறப் போட்டாய்
நான் மகிழ்ந்தேன்
அந்தப்புரத்தில்
உன் இசைகளை மட்டுமே
உரத்து ஒலிக்க வைத்தாய்
நான் சுவைத்தேன்.
பிறகுதான்
அறிந்து கொண்டேன்
என் மாளிகை இனி
எனக்குச் சொந்தமில்லையென்று.
2000
2 comments:
so sad.......................................... after
SUPERB!!!! 6!!!
6
Post a Comment