Tuesday, August 3, 2010
சவூதி முப்தியின் முட்டாள்தனமான பத்வா
சவூதி அதியுயர் பீட அறிஞர் குழாத்தின் முக்கிய உறுப்பினர்களுள் ஒருவரான ஷைக் அப்துல் முஹ்சின் அல்அபைகான் என்பவர், அண்மையில் பத்வா ஒன்றை வெளியிட்டிருந்தார். அதாவது பெண்கள் வாகனங்களை ஓட்ட முடியாது. அவ்வாறு ஓட்டுவது ஹராம் என்பதே அந்த பத்வாவாகும்.
இஸ்லாம் அனுமதித்த ஒன்றை தடுக்கும் இந்த பத்வாவை அங்குள்ள மக்கள் சிலர் எதிர்த்த போதும், இது மட்டரகமான முட்டாள்தனமான பத்வா என்று காரசாரமாகப் பெண்கள் திட்டித் தீர்த்த போதிலும், அச்சட்டம் அமுலுக்கு வந்தது. அதன்பின் நடைமுறைப் பிரச்சினைகள் எழுந்தன. மக்கள் இந்த பத்வா தொடர்பான தமது சந்தேகமொன்றை அதே முப்தியிடம் கேட்டனர்.
பொதுவாக சவூதியிலுள்ள ஒவ்வொரு குடும்பமும் தமது வாகனப் பயணத் தேவைகளுக்கென வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு சாரதியைக் கொண்டுள்ளன. இந்நிலையில், ஒரு பெண், அவசர மற்றும் உடனடித் தேவைகளுக்காக கண்டிப்பாக வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்படின், அச்சந்தர்ப்பத்தில் மஹ்ரமான துணை யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் தனது வீட்டில் பணியாற்றும் வாகனச் சாரதியுடன் செல்லலாமா முடியாதா?
அதற்கு அந்த முப்தி வழங்கிய பத்வா. சாரதி ஓர் அந்நியவர் என்ற வகையில், சட்டப்படி அந்த சாரதியுடன் வீட்டுப் பெண் பயணம் செய்ய முடியாது. எனவே, அப்பெண் அச்சாரதிக்கு தனது மார்பகத்திலிருந்து பாலருந்தக் கொடுப்பாளாயின், அச்சாரதி அவளுக்கு பால்குடியின் மூலம் மகனாகி விடுவான். இதன் பிறகு அவள் தனது மகனுடன் பயணம் செய்வதில் தவறில்லை.
இந்த பதிலால் சில மக்கள் ஆவேசப்பட்டனர். முப்தியை இழித்துரைத்தனர். ஒரு பெண் கல்ப் நியூசுக்கு தெரிவிக்கும் போது, 'வெளிநாட்டு நபரொருவருக்கு பாலூட்டும் படி என்னைப் பணித்து, எனது சொந்தக் காரை நான் ஓட்டக் கூடாது எனத் தடை செய்யுமளவு இஸ்லாம் அவ்வளவு கீழ்த்தரமாகவா போய்விட்டது? நான் எனது சொந்தப் பிள்ளைகளுக்கே பாலூட்டுவதில்லை. அவ்வாறிருக்க, எவ்விதத் தொடர்புமற்ற ஒரு வெளிநாட்டவனுக்கு நான் எவ்வாறு பாலூட்டுவது? இது என்னவொரு முட்டாள்தனம்?' எனக் கடிந்து கொண்டார்.
பிரச்சினை முற்றிய போது அந்த முப்தி மீண்டும் ஓர் அறிக்கை விட்டார்.
அதாவது, குறித்த பெண் அச்சாரதிக்கு பாலருந்தக் கொடுக்கும் போது நேரடியாக கொடுக்க வேண்டியதில்லை. ஒரு பாத்திரத்தில் கறந்தெடுத்து அருந்தக் கொடுக்கலாம்.
இப்போது சவூதியில் இந்த பத்வா அமுலிலுள்ளது.
இனி, தொழிலுக்காக எமது நாட்டிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் சவூதிக்குச் செல்லும் அப்பாவிச் சாரதிகளின் நிலை என்ன?
Labels:
விமர்சனங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment