Monday, February 1, 2010

வேற்றுமை

காலனித்துவம், மூன்றாம் மண்டல நாடுகளை உறிஞ்சிய போது, அதற்காகப் பயன்படுத்திய ஒரே ஆயுதம், சமூகங்களைத் துண்டாடுதலாகும். உபாயங்கள், தொழில்நுட்பங்கள் என்பவை மாறினாலும், இன்று வரையும் மாறாதிருக்கும், மேற்குலக அபிவிருத்தியின் வளர்ச்சிச் சூத்திரமும் அதுதான்.

அவர்களது இச்சூத்திரத்தின் மிகப் பிரமாண்ட வெற்றி, சமூக ஒற்றுமையை மார்க்க அடிப்படைகளுள் ஒன்றாக வலியுறுத்தும் இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற முஸ்லிம் சமூகத்திடை, இதனை ஆழ வேரூன்றச் செய்தமையாகும்.

இறைவனையும் இறுதித் தூதரையும் ஏற்றுக் கொண்டு விட்டால், அவன் முஸ்லிம் என்ற வரையறைக்குள் வந்து விடுகின்றான். அதன்பின், அவனது உயிர், உடைமை, கௌரவம் என்பவற்றைப் பாதுகாப்பது முஸ்லிம் சமூகத்தின் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.

எனினும், அடிப்படை ஒற்றுமையைப் புறந்தள்ளி, அற்ப வேறுபாடுகளைத் தூக்கிப் பிடித்து, துவம்சமாகிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தின் அழிவினதும் இழிவினதும் பின்புலத்தில் நிற்பது சியோனிச சக்திகளே என்ற உண்மையை உணர்ந்து கொள்ள, முஸ்லிம் சமூகத்துக்கு இன்னும் எவ்வளவு நாட்களாகுமோ!

No comments:

Twitter Bird Gadget