Monday, June 27, 2011

சில நொடி மரணம்



முதல் முயற்சியென்பதால் உள்ளிறங்க மிகச் சிரமமாக இருந்தது. உடலை நிமிர்த்திக் கெட்டியாக்கினால் மட்டும் போதுமா? வழியும் கொஞ்சம் இசைந்து கொடுக்க வேண்டுமே. பார்வைக்குப் பிடிபடாத ஊற்றுக் கண்ணிலிருந்து வஞ்சமின்றிச் சுரந்து கசியும் வழுவழுப்பு இல்லையெனில் என் முயற்சி இன்னும் கடினமாகியிருக்கக் கூடும். செடிகளை விலக்கித் தலையை விடுவதற்கு, சுற்றி நிற்கும் இருளின் மென்மை இடங்கொடவில்லை. உத்தேசமாகக் கணித்த ஒரு பகுதியென்பதாலும், முன்னனுபவமற்ற இயலாமையென்பதாலும் அதிர்ச்சியுறையும் அழுக்குப் பெட்டகமாய் வியர்த்துக் கொட்டிற்று உடல். எது? எங்கே? எப்படி? பிதுங்கிய நான்கு விழிகளிலிருந்தும் தூக்கம் தப்பித்து ஓடியது. இருளுக்கு மேலே ஏகாந்தமாய் வெறித்து நிற்கும் நிசப்தம் தைரியத்தின் முனைகளில் தொற்றி அங்குமிங்குமாய் முறுகிச் செறிந்து வழிந்தது. 

தொடர் முயற்சிக்குப் பின்னரான தோல்வி. சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டி உடலை விலக்கித் தரையில் கிடத்தினேன். மல்லாந்து படுத்துக் கொண்டு தலையைத் தாழ்த்தி வயிற்றினூடு பார்க்கக் கூச்சமாக இருந்தது. கண்களை மூடிக் கொள்ளலாம். தளர்வை ஏற்படுத்துவதெங்கணம்? வெண்முத்துகள் வாயிற் கதவைத் தட்டியும், கொந்தளிப்புடன் முட்டி மோதியும் கிளர்ச்சி எழுப்பிக் கொண்டிருக்கும் நிலையில் சடுதியாய்த் தளர்வது முடியுமா? பக்கவாட்டிலும் பார்க்க முடியவில்லை. புயல் வீசித் தணியும் உஷ்ணப் பெருமூச்சுகள் விறைத்துக் காதுகளில் உப்பிப் பெருத்தன. 

பக்கத்து வீட்டுச் சேவல் சிறகுகளைப் படபடவென அடித்துக் கொண்டு கூவிய கரகரப்பான சப்தம், நள்ளிரவு அமைதியைக் கிழித்துக் கொண்டு என் காதுகளுள் பாய்ந்தது. எனக்குக் கொஞ்சம் சிரிப்புத்தான். சரியாக நிகழ்வை அவதானித்தாற் போல், மறுமுயற்சியைத் துவக்கி வைக்கும் ஆரம்ப அறைகூவலாய் சேவலின் குரல் வந்து விழுவது இது மூன்றாவது தடவை. 


முதலிரு முயற்சிகளும் தோல்வியில் முடிந்தாலும், அவற்றில் ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற முடியுமெனத் தோன்றிற்று. நான்காவது தடவை சேவல் கூவும் போது பாதி உறங்கியும் பாதி கிறங்கியுமான விழிகளுடன் கட்டிலில் குப்புறக் கிடக்க வேண்டுமென திடீர்த் துடிப்பொன்று உடலை நிமிர்த்திப் பிடித்தது. 

தளராலாமா வேண்டாமா என்ற ஐயம் தோன்றியெழும்ப முயற்சித்த சற்றைக்கெல்லாம் நான் மீண்டும் தயாராகி விட்டேன். சேவல் இப்போது என்ன செய்து கொண்டிருக்கும்?

அகலத் திறந்த கண்களை இருள் கௌவியது. எழுந்து கைகளைப் பரப்பிக் கொண்டே படர்ந்தேன். நாசியூடு உள் நுழைந்த உஷ்ணக் கால் பொறித்த தாபக் கலவை அடி வயிறு வரை சென்று, பின் கீழிறங்கிக் கனத்தது. கொழுத்த சதைத் துண்டு கருமேகக் கூட்டங்களைத் துளைத்துக் குத்திட்டது. 

நான் மீண்டும் முயற்சியைத் தொடர்ந்தேன். உள்ளிறங்க மறுத்து நெளியும் தசைப் பிண்டச் சண்டைகளுக்கான தீர்வு முயற்சிக்கு முன்னிரு அனுபவங்களின் பாடங்கள் கைகொடுத்தன. இறுக்கம் தடையாகியது. கொஞ்சம் முரட்டுத் தனமும் வேண்டும் போலும். ஆனால் என்னால் அது முடியாது. என் உயிரின் பாதி வலியில் முனகிச் செருக நான் மட்டும் ஆனந்தக் களிநடனம் புரிவதா? எத்தனை இரவுகளானாலும் அமைதியாய், பொறுமையாய் இருந்து உதிரம் சிந்தாமலும் வலியில் துடிக்காமலும் காரியத்தைச் சாதிக்க வேண்டும். 

ஈரம் பிசுபிசுக்க மீண்டும் ஓர் அழுத்தம். சிறிய வலியின் அறிகுறியாய்த் தோன்றி மறைந்த முகச்சுளிப்பு என் நெஞ்சில் கைவைத்துத் தள்ளிற்று. ஈரம் காய்ந்து விடுமோ என்ற அச்சம், எடுத்துக் கொண்ட நேர அவகாசத்தைக் குறுக்கி விட, மீண்டும். நடுவில் ஏதோ இருக்கிறது. உள்ளிறங்கலைத் தடுக்கும் உத்தியாய்ப் படிந்துள்ள அந்தத் திரையை அகற்றினாலன்றி, சாதிக்க முடியாதென என்னை முந்திக் கொண்ட நண்பனொருவன் கூறியிருந்தான். திரையை அகற்றும் முயற்சி மையப்பகுதிகளில் இரத்தத் துளிகளைப் பரவ விடுவது தவிர்க்க முடியாத அனர்த்தம் என்றும் கூறியிருந்தான். 

தொடர் அசைவிலும் உராய்விலும் குதித்துப் பாய்ந்த முதலாவது துளியின் பருவ மாற்றத்திலிருந்து நான் ஆசை உறுமக் கண்டு வந்த கனவு நிலையிது. அந்தச் சில நொடிப்பொழுதின் சுகத்துக்காய் விடியலைத் தொடர்ந்து அழுத இரவுகள்தான் எத்தனை! மூடிய கண்களுள் நினைவுகள் உதிர்ந்து கட்டுடைத்துப் பாயும் உணர்ச்சிகளின் படிமமாய் உப்பும். 

சூர்யோதயக் கணப்பொழுதுகளில் தோன்றும் இருளைப் பிசைந்து அதன் கூர்முனையைத் தொண்டைக்குள் இறக்கிய வலிதான் நாளாந்தப் பழக்கமாயிற்று. சுமார் பன்னிரண்டு வருடங்களை இழுத்துக் கொண்டோடிய அந்த நினைவுகளின் பிரதிபலிப்புகள் இப்போதைய என் முடிவான முரட்டுத் தனத்திற்கும் காரணமாய் இருக்கக் கூடும். 

துண்டு துண்டாய் அரிந்து பொதியாய்க் கட்டித் தலையிலேற்றிய நிலவின் சுமை போல், பெரு மழையின் ஆரம்பத் துளிகளில் அறைபடும் நாணலின் அழுகை போல் மனதுக்குள் குறியீடுகள் முளைக்கும். உண்மையில் அது ஒரு மரணம்தான். அந்தச் சில நொடி மரணத்தில் நரம்பு மண்டலங்களெங்கும் உயிர்க் கூச்செறியும். அடியில் சுகம் உறைந்து மயிர்க்கால்கள் சிலிர்த்துக் களிரும். புறக்கண்கள் செயலிழந்து தொய்ய, அகக்கண்கள் உலகின் அந்தரங்கச் சூட்சுமங்களையெல்லாம் புலனுக்குள் இழுத்துக் கொணர்ந்து நதிச்சரடாய்ப் பளபளப்புமிழும். தனிமையின் வலிமைக்கும் இரவின் இருண்மைக்கும் நான் பலியாகிப் போனேன். சுயமுயற்சியேயன்றி வேறு வழியற்ற நிர்ப்பந்தக் கரங்கள் என் கிறங்கலின் முனகலைப் புதைத்து மூடின. சீ எனத் தோன்றும் கணங்களில் மனசாட்சி உறுதியெடுத்துக் கொண்ட போதும், அதைத் தொடர்ந்தும் நிலைநாட்ட முடியாதவாறு உணர்வுகளின் கெடுபிடி எகிறிற்று. 

வைத்தியர்கள் இதனைத் தடுக்கவில்லையென்றாலும் நாளாந்தப் பழக்கம் நல்லதல்ல என்று அடைப்புக் குறியிட்டிருந்தது மானசீகத் தடையாயும், பலவீனம் ஏற்பட்டு விடுமோ என்ற கவலையாயும் படிந்திருந்தது. இதற்கான ஒரே வழி -சமயமும் மற்றும் சகலரும் சொல்வது போன்று- வாழ்வைப் பகிர்ந்து கொள்வதுதான். எதிர்ப்பட்ட கரடு முரடுகள், தங்கு தடைகளையெல்லாம் தாண்டி வந்தாயிற்று. கனவின் காட்சிகள் கண் முன்னே விரிந்து கிடக்கின்றன. சுய முயற்சியின் போதிருந்த சுதந்திரம் இல்லைதானெனினும், இன்பம் உண்மையில் இரட்டிப்பாகவே இருக்கிறது. இயற்கை வகுத்துள்ள பாதையில் பயணிப்பது மனித வாழ்வின் அனைத்துச் சங்கடங்களிலிருந்துமான பாதுகாப்புக்குக் கெட்டியான வழியெனச் சமயப் பிரசாரகர் ஒருவர் பேசியது இதற்கும் பொருந்தும். 

அசையா இருட் போர்வைக்குள் அசையும் இருளுருவமாய் மேலேறிப் பணிந்தது உடல். இயற்கை வகுத்த பாதைக்குள் கால் இடறிற்று. சிரமப்பட்டுச் சரியான இடத்தில் பொருத்தி விட்டேன். இனி வெகு அவதானமாக உட்செலுத்த வேண்டும். தசைச் செருக்குகளின் உராய்வில் சரசரப்பைத் தவிர்த்து, வழுக்கிச் செல்ல விடுவதென்பது அனுபவமற்ற கட்புலனுக்கு அவ்வளவு இலகுவானதல்ல. எல்லாம் புதிதாக இருக்கும் போது சுகம் அதிகமிருக்கலாம்; சிரமம் இல்லாதிருக்குமா? முடியுமானவரை இயற்கையாக முயற்சித்துப் பார்த்து விடுவதென்ற முடிவிலேயே நான் இருந்தேன். வழுக்கும் தன்மையைப் பெறுவதற்காக, அல்லது அதிகரிப்பதற்காக செயற்கைப் பதார்த்தங்களை உபயோகிப்பதுதான் புதியவர்களுக்கு நல்லதென பழையவர்களான சிலர் எனக்கு அறிவுரை கூறியிருந்தாலும், எனக்கதில் கொஞ்சமும் உடன்பாடு இருக்கவில்லை. இப்போதுள்ள நிலையைப் பார்க்கும் போது, உடன்பாடின்மையைத் தூக்கி ஒரு பக்கம் வைத்து விட்டு உபயோகித்துப் பார்த்து விடலாமா என்றொரு எண்ணம் மெல்லத் தலைதூக்கிற்று. ஆனால் கைக்கெட்டும் தூரத்தில் எதுவுமிருக்கவில்லை. எழுந்து சற்று தூரம் நடந்து சென்று தேடியெடுப்பதற்குள் இருப்பதும் காய்ந்து காணாமல் போய்விட்டால்....?

இந்த இறுக்க நிலையிலுள்ள ஒவ்வொரு நொடியும் கூட வரையறுக்க முடியா பெறுமதி மிக்கது. சாண் ஏற முழம் சறுக்கும் அறியாமைக்குள் வீழ்ந்து தத்தளிப்பதற்கு புத்திக் கூர்மையின் உச்சி அறுந்த வாலாயிருக்க வேண்டும். செயலில் தளர்வைத் திணிக்க முயலும் முரணுணர்வுகளைக் கொத்தாக ஒதுக்கி விட்டுச் சிந்தனைகளை ஒருங்கிணைக்க முயன்றேன். போராடி வெல்லும் போதில் கிடைக்கும் அற்ப சுகமும் மரணக் கசப்பு முரடு நனைக்கும் வரை தித்துக் கொண்டேயிருக்கும் பண்புடையது என்பது நான் அறியாததல்ல. 

இரண்டு வீடுகள் தள்ளியிருக்கும் குறுக்கு வீதியால் வாகனம் ஒன்று மிக வேகமாகக் கடந்து செல்லும் கடூரச் சத்தம், கதவிடுக்கு வழியாகச் சீறியடித்தது. என்ன அவசரமோ, நள்ளிரவுத் தூக்கத்தையும் தொலைத்துவிடும் நிர்ப்பந்தம் அவர்களைத் துரத்தியிருக்கிறது. திடீர் நோய்காணல், மரணம், கொலை, கொள்ளை, மறுநாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள், பாலுணர்ச்சித் தூறல்கள், கட்டற்ற வாழ்க்கை முறை எதுவும் காரணமாக இருக்கலாம். நானொருவன் இங்கே அனுபவமுமில்லாமல், நேரடி வழிகாட்டலும் இல்லாமல், முழுதாகச் சாப்பிடவும் இயலாமல், இடையில் கைகழுவவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருப்பது அவர்களுக்குத் தெரியுமா?

சூரியனைத் தொலைத்து நிற்கும் இரவின் மந்தகாசம் எத்தனை அந்தரங்கங்களையும் அசூசைகளையும் சந்தித்து வந்திருக்கிறது. குழிகளிலிருந்து மீளும் நீளத்தசைகளின் ஈரலிப்பைக் காற்று உலர்த்தும் போதும், இருபக்க மென்சுவர்கள் ஊடறுத்துப் பாயும் தசை முறுக்கை இறுக்கிப் பிடிக்கும் போதும், தேங்கிய அழுக்குக் குட்டைக்குள் தவளை குதிக்கும் ஒலி தொடங்கி முடியும் போதும், எல்லாவற்றையும் பார்த்து ரசித்துக் கொண்டு வெறுமனே படுத்துக் கிடப்பதே இதற்கு வேலையாயிற்று. இந்த அந்தரங்கங்களைப் பார்க்கக் கூடாதென்பதற்காகத்தான் கண்களை இறுக்க மூடி இருளைக் கவிழ்த்து விடுகிறதோ இந்த இரவு!

'இரவுதான் நிர்ணயிக்கப்பட்டதென்றோ, பொருத்தானதென்றோ தீர்மானங்கள் எதுவுமில்லை. பகலிலும் முயற்சித்துப் பார்க்கலாம்' என்று நண்பனொருவன் கூறியிருந்தது எரிச்சலாய் நினைவில் உதித்தது. வேறு என்ன வேலை, ஒன்றாகக் கூடிவிட்டால். அளவீடும் மதிப்பீடும்தான். கழுத்தில் கட்டிய இரட்டை அப்பிள் பழ அளவீடும், மேற்பிளவைக் கணித்து கீழ்ப்பிளவைத் துணியும் மதிப்பீடும் கற்றலின் ஆர்வத்தை உசுப்பும் பொழுதுபோக்குப் பாடங்கள். ஒளிக்காட்சிகளின் நிழலுருவங்கள் இச்சையைத் தூண்டி இளமையைப் பாதிக்குமேயன்றி, பயனுள்ள அனுபவப் பாடங்களெவற்றையும் தரமாட்டா என்பது அப்போதன்றி இப்போதே எனக்குப் புரிகிறது. இந்த விஷயத்தில் என்னை முந்திக் கொண்ட பலர், இது பற்றிக் கொஞ்சமும் நாத்திறந்ததில்லையே. வெட்டிக் கிழித்துப் பூமியைப் புரட்டிப் போட்ட செருக்கு திமிற வாய் பிளந்துதிர்க்கும் அவர்களது வார்த்தைகள், ஆரம்பச் சங்கடங்களையும் சிரமங்களையும் முக்கியத்துவப்படுத்துவதைத் தவிர்த்தமை திட்டமிட்ட சதியா? அல்லது நான் மட்டும்தான் இப்படி அவதியுறுகின்றேனா?


எங்கள் குழுவில் எப்போதும் அந்நியனாய் நோக்கப்படும் மொட்டை நண்பன் அன்றொரு நாள் கூறிக் கொண்டிருந்தான்: "எல்லாவற்றிலும் முன்னனுபவம் வேண்டுமென்ற என் கொள்கையை நீங்கள் உதாசீனப்படுத்துகிறீர்கள். ஆயிரம் ரூபாவும் அரைமணி நேரமும் செலவிட்டு, வெளிச்சமும் பொலிஸ§ம் புகாத குகையின் கருந்துளைக்குள் நானீட்டிய வெற்றியின் அனுபவம்தான் பிற்பாடு சட்டரீதியான அங்கீகாரச் சுருக்குகளை இலாவகமாகத் தாண்டிச் செல்லும் தைரியத்தை எனக்களித்தது" 

என்னைக் குறித்துச் சொன்னான்: "உன் போன்ற கொள்கைக் குன்றுகள் ஏட்டனுபவங்களின் கையாலாகாத் தனத்தையுணர்ந்து முழிபிதுங்கிக் கூன்விழுந்து நரை கண்டுழலும் காலமொன்று வரும். அப்போது என்னை, என் கொள்கையை உதாசீனப்படுத்திய தவறையுணர்ந்து தவிப்புறுவாய்"

அவன் சொன்னது நியாயம்தானோ என மனம் கள்ளத்தனமாய்ச் சிந்திக்க முயன்றது. ஆனாலும் அவனது கூற்றை இன்னும் என்னால் அங்கீகரிக்க முடியவில்லை. குடும்ப வாழ்வையும் சமூக உறவையும் இடித்துத் தகர்க்கும் மூர்க்கத்தனப் பண்புடைய அவனது இந்தக் கொள்கையே நீண்ட காலமாய் நான் என்னிலிருந்து வெகு தொலைவில் அவனை நிறுத்தி வைத்து வந்தமைக்குக் காரணமாயிருந்தது. 

எதிலும் போராடி வெல்ல வேண்டுமென்ற என் கொள்கையின் முன்னால், அவன் பல தடவைகள் மூக்குடைபட்டிருக்கிறான். இம்முறை மூக்குடைபடப் போவது நானா? அவனா? இறுதிச் சந்தர்ப்பம் வரைக்கும் முயற்சியைத் தளர்த்தாத நெஞ்சுரமுடையவன் என பயிற்றுவித்தவர்களும் பயிற்சி பெற்றவர்களும் என்னைப் பற்றிக் கருத்துரைத்திருக்கும் நிலையில் இந்தச் சிறிய விடயத்தில் தோற்றுவிடுவேனோ என அஞ்சுவது எவ்வளவு பெரிய அறிவீனம்! சிறிய விடயமென்றும் இதைக் கூறிவிட முடியாது. எதிர்ப்பாற் தாபத்தின் குறித்தழுவலுக்கான ஏக்க உணர்வுகளைக் கவிழ்த்துக் கொட்டிவிட்டு எழுவது மட்டுமல்லவே இதன் நோக்கம். சம்பிரதாயங்கள் வரையறுத்துள்ள கட்டமைப்பின் கீழ் நின்று உடற்சேர்க்கையினூடு மூலகங்களைக் கலந்துருவாக்கும் பிற்கால மானுட உயிர்வளையங்களின் உற்பத்தியை விடுத்துப் பார்த்தால், தூக்கத்தைச் சிதறடித்து உடலை ஏமாற்றிப் பலவீனப்படுத்தும் வெற்றுப் பணியென்றே இதனைக் கூற வேண்டும். 

இன்று பகலில் இடம்பெற்று முடிந்த சம்பிரதாயங்கள் எல்லாம், நண்பர்களின் கேலிப் பேச்சுகளுக்கு அப்பாலும் நாவுக்கிதமாய் இனித்துக் கொண்டிருந்தமைக்கு என்ன காரணமாய் இருக்கும். இரவில் நிறைவுறவிருக்கும் மற்றுமொரு சம்பிரதாயம் பற்றிய எதிர்பார்ப்பின் கொடுமுடி அதிகாரமா? திரையினூடு பாய்ந்துதிர்ந்து உடலுக்குள் தீமூட்டிய உஷ்ணக் காட்சிப் படிமங்களுக்கு நேரடி விமர்சனமெழுத முடியுமென்ற உரிமை தோற்றுவித்த மமதையா? எது, சுற்றுச் சூழலின் சில்மிஷங்களையெல்லாம் மறக்கடித்து என்ன மகிழ்ச்சிப்படுத்தியது?

சூரியனைச் சபித்துச் சபித்துத் துரத்தி, நள்ளிரவு நிலவையும் சில நட்சத்திரங்களையும் வரவழைத்தாயிற்று. எதிர்பார்ப்புதான் இன்னும் நிறைவேறிய பாடில்லை. ஏன் இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. நுழைய மறுக்கிறதா? நுழைவை ஏற்க மறுக்கிறதா? பிரச்சினை எங்குள்ளது என்பதைச் சரியாக இனங்கண்டால்தானே அதற்குரிய தீர்வை முன்வைக்கலாம். நிழலுருவங்களின் காட்சிப் பாதிப்புகள் என் கண்களை உறுத்துகின்றன. எவ்வளவு இலாவகமாக, இலகுவாக, மிகச் சாதாரண ஒரு பணியாக உள்ளேறி வெளியேறி, உள்ளேறி வெளியேறி.... அவையெல்லாம் வெறும் நடிப்புகளா? புறக்கண்களை ஏமாற்றும் குறளி வித்தைகளா?

எனக்குள் சந்தேகம் எழுந்தது. நான் இப்போது சிந்தித்துக் கொண்டிருக்கிறேனா? செயற்பட்டுக் கொண்டிருக்கிறேனா? எத்தனை தடவைகள்தான் இந்தச் சிந்தனைகளை ஒதுக்கி விடுவது. எவ்வளவு நிராகரித்தாலும் சற்றும் இலட்சியமின்றி மீண்டும் மீண்டும் வந்து சுயமரியாதை கெட்டுச் சுரண்டிக் கொண்டிருந்தால் நான் எப்படிப் பணியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்ய முடியும். 

உண்மையான ஆக்ரோஷமொன்றை உடலில் ஏற்றிக் கொண்டே முஷ்டி மடக்கித் தலையைச் சிலுப்பிக் கொண்டேன். இப்படி நான் செய்தால், குறித்த விடயத்தை வெற்றி கொள்வதற்கான உச்ச கட்ட உழைப்பை வழங்கத் தயாராகி விட்டேன் என்பது அர்த்தம் என என் நண்பர்கள் கூறுவார்கள். இனி விடயம் முடியப் போகிறது எனத் தங்களுக்குள் பேசியும் கொள்வார்கள். பணியை எப்படியாவது நிறைவுறுத்தி விடுவது என்ற முடிவுடன்தான் நான் இருந்தேன். உஷ்ணம் தழுவிக் கிடந்த சிறு காலை மேலும் சூடாக்கிக் கெட்டிப்படுத்தி, துளையின் மையத்தில் சரியாச் செருகி, மூச்சை இழுத்து நெஞ்சை நிரப்பிக் கொண்டே ஆக்ரோஷமாய் அழுத்தி விட்டேன். பிதுங்கிக் கொண்டு உள்ளே சென்று ஐந்தங்குலமும் மறைந்து விட, ஆஹா என்ன சுகம்! 

பிறிதோர் உலகத்துள் பிரவேசித்த வெதுவெதுப்பும், மிக மென்மையான யௌவனச் செழுமையும், ஈரப்பஞ்சின் ஸ்பரிசமும் சூழ்ந்து இறுக்கிப் பிடிக்க, சிலிர்த்து நிற்கும் உடலின் ஒட்டுமொத்த ரோமங்களினதும் சுகக் கிறுகிறுப்பில் கால்களையும் கைகளையும் அடித்துக் கொண்டே நான் அந்தரத்தில் மிதந்தேன். பார்வைக்குப் புலப்படாத இருட்குகைக்குள் நுழைந்து விட்டதில் என்னவோ நடக்கிறது. இரத்தத்தினதா? ஈரத்தினதா? எதன் பிசுபிசுப்பு இது? வலியினாலா, தாபத்தினாலா எனக் கிரகிக்க முடியாத மென்குரலொலி என் காதுகளை வருடுகிறது. அதையெல்லாம் நுட்பமாய் அவதானிக்கும் மனோ நிலையில் நானில்லை. அமானுஷ்ய சுகத்தின் அதிகாரக் கொடுங்கரங்களுக்குப் பற்றாமல் என்னுடல் கொஞ்சமாய்ப் போயிற்று. விவரிக்க முடியாத சுவை முறுகிய ரசச் சொட்டுகள் என் உதடுகளில் அழுந்தி நாவில் படிந்து, குடலில் ஓடிக் களைத்து முன்துவாரத்தில் வந்து முட்டிச் செருமிற்று. வெறுமனே வைத்துக் கொண்டிருந்தால் போதுமா? சற்றுச் சிரமப்பட்டு வெளியே இழுத்தேன். முழுதாக வருமுன் மீண்டும் உள்ளே தள்ளினேன். வெளியே இழுத்து, உள்ளே தள்ளி, வெளியே உள்ளே.... சற்று நேரக் கண்கள் கிறங்கிய சுகப் போராட்டம் உடலை வளைத்துப் பிடித்துத் தாவி ஏறிற்று. 

முனையில் வியர்த்தது. அழுத்தங்களின் பிரதியீடாய் எழுந்து பணிந்து திமிறும் தாபச் சிலிர்ப்பைக் கைகளால் கட்டுப்படுத்திக் கொண்டே தொடர்ந்து போராடினேன். எங்கோ அற்புதமான சுவனமொன்றிலிருந்து அரூபமாய் ஊற்றெடுத்துச் சீறிப்பாய்ந்து வந்து, மடக்கிப் பிடிக்க முடியா இறுமாப்புடன் வியர்த்திருந்த முனை வழியே கோபம் கொண்ட பாம்பின் விஷத் தூறல்களாய்ச் சிதறியடித்துச் சூடாய்க் கொட்டிற்று குளிர் வெண்மணிகள். உடலைக் கட்டியிறுக்கிய உணர்ச்சிக் கயிறுகளின் இறுக்கம், தொண்டையின் சுருதிகளைத் தூக்கி நிறுத்தி, இருளைக் கிழித்துப் பரவும் ஆனந்தக் கதறலாய்த் தெறித்தது. 

பழக்கப்பட்ட சுகம்தானெனினும், புது உறுப்பின் ஸ்பரிசமும் அதன் துளையில் உணர்ச்சிகளை ஒட்டுமொத்தமாகக் கொட்டக் கிடைத்த சந்தர்ப்பமும் இணைந்து விவரிக்க முடியா விறுவிறுப்புச் சுகத்தை என் உடலெங்கும் அள்ளிப் பூசின. சுவர்க்கத்திலிருந்து மீண்டு உலகுக்கு வந்த ஆசுவாசத்துடன், மூடிய விழிகளைத் திறந்து முன்னே மலர்ந்திருக்கும் பூவிதழைப் பார்த்தேன். சாதித்துவிட்ட மகிழ்ச்சியாய், அல்லது சாதிக்க எனக்கிடமளித்த பெருமிதமாய் பரந்திருந்த குறுநகையின் மென்மை தழுவிய அழகு என் கண்களில் நிரம்பி வழிந்தது. வாழ்வின் புத்தம் புது அனுபவம் சேமித்துக் கொட்டிய சந்தோஷம் முழுவதையும் நெஞ்சம் நிறைய உள்வாங்கிக் கொண்டே நிம்மதிப் பெருமூச்சுடன் விலகி, மல்லாந்து விழுந்தேன். இனி என்னால் முடியும் என்ற நம்பிக்கையும் தைரியமும் ஆசுவாசப்படுத்தலுக்குப் பின்னரான மற்றொரு போராட்டம் பற்றிய சிந்தனையில் மூழ்கிக் கழிக்க நான் சிரித்துக் கொண்டேன். 

பக்கத்து வீட்டுச் சேவல், சிறகுகளைப் படபடவென அடித்துக் கொண்டு கூவத் தொடங்கிற்று. 

No comments:

Twitter Bird Gadget