இரவிருளுடன்
சண்டையிடுகிறாய்
வெல்கிறாய்.
பகலின் எச்சங்களில்
உன் பட்டுக் கரங்களை
நெளிக்கிறாய்.
குளிர்மையைக்
கொட்டுகிறாய்
காதலர்களை
குசலம் விசாரிக்கிறாய்
கவிஞர்களின் சிந்தனைகளில்
விழுகிறாய்
கவிதையாகிப் பொழிகிறாய்
சில நேரங்களில்
நாணி
மேகத்திரைக்குள்
முகம் புதைக்கிறாய்
அருவிகளில்,
மலைமுகடுகளில்,
பயிர்ப் பசுமைகளிலெல்லாம்
செழிப்பாகிக் கவிழ்கிறாய்
சிறகு விரித்துப் பறக்கிறாய்
நெஞ்ச ரணங்களில்
ஒத்தடமாகிறாய்
கொஞ்சும் நினைவுகளில்
கிளுகிளுப்பூட்டுகிறாய்
ஆனாலும் -
உன்னால் பார்க்க முடியுமான
தொலைவில்
என்னவள் இருக்கிறாள்
அவளை
பிரதிபலித்துக்
காட்ட முடியாத நீ
என்னிடம்
தோற்றுத்தான் போனாய்
நிலவே!
August 2006
1 comment:
this is 4 US nah?
Post a Comment