உஷ்ண மூச்சு அடங்கிற்று
தளர்ந்த பிடியில்
தணிந்த தாகத்தின் புளகாங்கிதம்
போர்க்குத் துணிந்து விட்ட
முள்ளம் பன்றியாய்
சிலிர்த்திருந்து அடங்கும் ரோமக்கண்களூடு
வியர்வையின் வாடை தலைநீட்டிற்று
இடைவேளை முடித்து மீண்டும்
நடைமுறைக்கு வந்த உலகில்
இருண்மையின் பிசுபிசுப்பு
இன்பம், சுகம், நிம்மதி, அமைதி!
அழுதும் வடிவும் அவனை
சாந்தப்படுத்த
சற்று நேரம் தேவைதான்
பக்கவாட்டில் திரும்பிய போது
கண்மூடிக் கனிந்திருக்கும்
என் இரவுப் போர்வையின் மலர் முகம்
அந்த நடுச்சாமத்திலும் எனக்கு
நன்றாகத் தெரிந்திற்று
No comments:
Post a Comment