Wednesday, May 5, 2010

நினைவின் நாணம்


வெள்ளை நிற ரோஜாவொன்றின்
சுகந்தமான வாசமாய் - அவள்
வசீகரித்தாள் என்னை

முறுக்கேறித் திரட்சியுற்றிருந்த
தனிமை விருட்சத்தில்
மதனநீர் சுரந்திற்று

சிரித்தணைத்து
சரீரம் பிணைத்து
வியர்வை வாடை மறந்து
விளைந்த பயிரில்
ஆழ்ந்த பெருமூச்சொன்று
அறுவடையாயிற்று

நள்ளிரவு உலகில்
தன் மெல்லிய ஒளி கவிழ்க்கும்
முழு நிலவின் இதத்தை
அந்தக் கட்டில் மீது
கொட்டி வைத்தது யாரோ!

தம் தலைகளை வருடிச் செல்லும்
மரங்கள் மீதான தென்றலின் பரிவை
இந்த உள்ளங்களில்
ஊட்டி விட்டது யாரோ!

கண் கசக்கித் துயிலெழும்
காலையின் தூய்மை
இரவின் நினைவுறுஞ்சி
நாணம் வழியும் பாசச் சுவையை
நாவுகளில் தடவும்

அன்பு செழித்த பாதையூடு
நிம்மதிச் சுவாசம் நீளும்

குயிலிசைக்கும் சோலையிடை
குடியிருக்கும் ஏழை போல்

No comments:

Twitter Bird Gadget