Wednesday, April 28, 2010

முகம்


எங்கு தேடினாலும்
தெரிவதில்லை
உன் அழகு முகம்

மழை மேகத்தின்
இருண்மைக்குள்
பார்த்துப் பார்த்து
சலித்துப் போன
தோற்றங்களுக்குள்
புதையும்

என் சிந்தனைகள்
மூச்சுக்கள்
முயற்சிகளின்
உயிர்களை உருவி
உயரப் பறந்து
உதிரும்

நட்சத்திரங்களைப்
பொறுக்கித் திரியும்
நிலவுக்குப் பின்னாலும்
ஒளிரும்

பார்வையில்
உணர்வுகளில்
கனவுகளிலெல்லாம்
அசையும்

தனிமையின்
கொடுங்கரங்களில்
தாகத்தின்
பெருமூச்சுகளில்
முறுகும்

ஆயினும்
என் உட்கிடக்கைகளை
உரசிப் பார்க்கும்
சுதந்திரம் உனது

அதனால் -
கற்பனைக்குள்
எங்கு தேடினாலும்
தெரிவதில்லை
உன் அழகு முகம்!

December 2006

No comments:

Twitter Bird Gadget