பௌர்ணமியிடமான
இருளின் தோல்வியும்
வெகு நுண்மையான
மோனச் செழுமையும்
கட்டிப் புரளும்
ஆனந்தக் கணங்களில்
ஆரம்பமாயிற்று அந்த யுத்தம்!
உடலிறுக்கி
உணர்வெழுப்பி
நேசத் திரட்சியுற்ற
இருவர் மட்டுமே
பங்கெடுக்கும் அது
ஒரு புனித யுத்தம்!
வெஞ்சினமில்லை
வெகுண்டெழும் சீற்றமில்லை
பாசப் பிணைப்பின்
பாற்பட்டு,
அகப் பிணைப்பைப்
பலப்படுத்துவது
உச்சியில் காய்ந்து சரிந்து
ஜன்னலூடு உட்கசியும்
நிலவின் ஒளித்தழுவலுடன்
முற்றிற்று அந்த யுத்தம்
இனியென்ன –
மூச்சிரைப்பும்
ஆசுவாசப் பெருமூச்சும்
வெற்றியின் அடையாளமாய்
வெளிப்பட்டுப் பரவும்
January 2006
1 comment:
....உச்சியில் காய்ந்து சரிந்து
ஜன்னலூடு உட்கசியும்
நிலவின் ஒளித்தழுவலுடன்
முற்றிற்று அந்த யுத்தம்.... awsme!!!
Post a Comment