Friday, April 30, 2010

நினைவிலும் பிரிவிலும்


தென்றல்
என்னை வருடுவதில்
மலர்கள்
என் பெயர் உச்சரிப்பதில்
பௌர்ணமி
என் மேற் கவிழ்வதில்
கனவுகள்
என்னைத் தாலாட்டுவதில்
மேகம்
என்னைச் சுமந்து செல்வதில்
இவற்றின் போதெல்லாம்
என் புலன்கள் உணராத
இனிய சுகம்
உன் நினைவுகளின் போது மட்டும்
எப்படி நிகழ்கிறது!

வெள்ளம்
என்னை அடித்துச் செல்வதில்
புயல்
என்னைச் சுழற்றி எறிவதில்
சுனாமி
என் கழுத்தை நெரிப்பதில்
பூகம்பம்
என்னைப் பிளந்து விழுங்குவதில்
நெருப்பு
என் உடலைப் பொசுக்குவதில்
இவற்றின் போதெல்லாம்
என் புலன்கள் உணராத
கொடிய அச்சம்
உன் பிரிவின் போது மட்டும்
எப்படி நிகழ்கிறது!

என் உணர்வுகளைத் தாலாட்டும்
மற்றொரு தாய்
நீ என்பதாலா?

October 2006

1 comment:

Anonymous said...

neenga onnum ninaikkalenna intha kavithayai naan konjam suttu edukkirean.

Twitter Bird Gadget